கவிதை தொகுப்பு

இளைப்பாறிவிடாதே மகளே அதற்குள் இருக்கின்றன கணக்குகள் நிறைய அரசியல் செய்கிறோம் உன் மரணத்தை வைத்தென்றார்கள் இதுதானா படிப்பதற்கு  இல்லவே இல்லையா வேறெதுவும்  என்றார்கள் ஆயிரத்து நூற்றி எழுபத்தாறு எடுத்தவளால் நீட் தேற முடியாதெனில்  பாடத்தில் கோளாறென்றார்கள் நீட்டைத் தேறியவனால்  ஆயிரத்தி நூற்றி எழுபத்தியாறு எடுக்க முடியாதெனில்? சாய்சில் விடுகிறார்கள் இதை  எதையும் விடாது படித்து  கரைகண்ட …

          சித்தன் படும் பாடு எல்லாம் ஞானம் வந்தால் அமைதி பெறும்.. பித்தனுக்கும் உறக்கம் வந்தால் கண்ணயர்வான் ஞானப்பெண்ணே!! ஊரெல்லாம் அலையுறேண்டி. ஓரிடமும் காசு இல்ல ஞானப்பெண்ணே!! மைக் வச்சு பேச வச்சோம்.. மை தடவ விரலும் தந்தோம்.. மடியில கை வச்சானடி… ஞானப்பெண்ணே!! அடிவயிற்றில் சுட்டானடி… ஒளிருது பார் …

காவிரியில் கண்ணீர்.. – பூந்தை ஹாஜா.எந்நாட்டவர்க்கு நீர் வேண்டும்… தண்ணீர் தேவையில் தன்னிறைவு எப்போது…தண்ணீர் தரக்கோரி நாடெங்கும் பதட்டம்.. அணைகளில் நீர் இல்லை காலியிடங்கள் நிரம்பவில்லைஎங்களுக்கு ஏன் தண்ணீர் இல்லை என்று கேட்டால்.. அண்டைநாட்டு அரசனுக்கு தொண்டை அடைத்துக்கொன்டதை உணரமுடிகின்றது. தேசத்தை ஆளுபவனின் வார்த்தையோ மனைவிக்கும் அம்மாவுக்கும் நடுவே உள்ளதை உணரமுடிகின்றது. மாடுகளின் மூக்கனாங்கயிறு விவசாயிகளின் …

என்னருகே நீ இருந்தால் இந்த உலகினை வெல்வேன் என்னருகே நீ இருந்தால் உன்னை நிலாவில் குடி வைப்பேன் என்னருகே நீ இருந்தால் நட்த்திரங்களை பிடித்து வந்து உன் வாசலில் தோரனை கட்டுவேன் என்னருகே நீ இருந்தால் வான் மேகங்களை கொண்டு வந்து உனக்கு அர்ச்சனை செய்வேன் என்னருகே நீ இருந்தால் மலையை குடைந்து மாளிகை அமைப்பேன் …

கண்ணீரில் கரைந்த நட்பு தாயின்றி தவித்தவளுக்கு தாய்மடி நீயும் தந்தாயடி தந்தையை இழந்து நின்றவளுக்கு தோள் கொடுக்கும் தோழியாய் நீயும் நின்றாயடி தவமின்றி என் வாழ்வில் நீயும் கிடைத்தாயடி எனை தாங்கும் வரமாய் நீயும் இருந்தாயடி…. துவண்டு போய் கிடந்தவளை அன்பு எனும் அஸ்திரத்தால் தலை நிமிர்ந்து நிற்கவே செய்தாயடி வலிகள் நிறைந்த என் வாழ்க்கையிலே …

இந்தியா என்பது ஒரு நாடல்ல அங்கு நிலவும் இந்து மதம் என்பது ஒரு மதமும் அல்ல.. ஆங்கிலேய காலனி ஆட்சி ஆளர்களால் இந்த நாட்டை சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் உருவாக்கப்பட்டதுதான் இந்தியா என்ற நாடு அந்த ஆங்கீலேயன் வைத்த பெயர்தான்.. இந்து என்ற சாதிவெறி மதம் அதற்கு முன்பு..இங்கே பலதேசியஇனங்கள் அவைகளின் கலாச்சார பிரிவுகள் பல்வேறு மதங்கள், …

*பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள். *உரியவர்களிடம்  சொல்லுங்கள். ஊரெல்லாம் சொல்லாதீர்கள். *நடப்பதைப் பாருங்கள். நடந்ததைக்  கிளறாதீர்கள். *உறுதி காட்டுங்கள். பிடிவாதம்  காட்டாதீர்கள். *விவரங்கள் சொல்லுங்கள். வீண்வார்த்தை சொல்லாதீர்கள். *தீர்வை விரும்புங்கள். தர்க்கம் விரும்பாதீர்கள். *விவாதம்  செய்யுங்கள். விவகாரம் செய்யாதீர்கள். *விளக்கம் பெறுங்கள். விரோதம் பெறாதீர்கள். *பரிசீலனை செய்யுங்கள். பணிந்து போகாதீர்கள். *சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள். …

ஒருகோடி அணுக்களுடன் உல்லாசமாய்த்  தொடங்கி உடன்வந்தோரை விட்டுவிட்டு வெற்றிபெற்றது ஒருகருவின் பயணம்! ஆகாயவிண் வெளியில் அன்றாடம் வந்துமறையும் அம்புலியில் காலூன்றியது ஆர்ம்ஸ்ட்ராங்கின் பயணம்! கடல்நீரில் தொடங்கி அலைகளுடன் போராடி அமெரிக்காவைக் கண்டது கொலம்பஸின் பயணம்! அன்பால் அணைத்து அகம்குளிர உணவளித்து ஆனந்தம் தந்தது அன்னைதெரெசாவின் பயணம்! தீண்டாமையால் பாதித்தோர் தலைநிமிர்ந்து வாழவைத்தது அனைவரையும் சம்மாக்கியது அம்பேத்காரின் …

மங்கையவள் இல்லை எனில் மாநிலமே இல்லை என்பார் சங்கெடுத்து முழங்கி நிற்பார் சகலதுமே மங்கை என்பார் எங்களது வாழ்க்கை  எலாம் மங்கலமே மங்கை என்பார் பொங்கி வரும் புத்துணர்வே மங்கை அவள் தானென்பார் கங்கை முதல் காவிரியை மங்கை என விழித்திடுவார் எங்கள் குலம் விளங்குதற்கு வந்தவளே மங்கை என்பார் பூமிதனை மங்கை என்பார் பொறுமையையும் …

பாலக்காட்டின் அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில் பிறந்து பார் போற்றும் இசையமைப்பாளரானவர் சுப்பிரமணியன் நாராயண குட்டியம்மாள் ஆகியோரின் சுந்தர மகனாகப் பிறந்து நான்கு வயதில் தந்தை இழந்தவர் தாத்தாவிடம் வளர்ந்து நீலகண்டரிடம் இசை பயின்றவர் தாம் தீம் என பதினான்கு வயதில் மேடை கண்டவர் பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்கக் கற்றவர் பல்வேறு மொழிகளுக்கும் இசையமைத்தவர் இராமமூர்த்தியோடு …

உன்னழகைக் காட்டுதடி எண்ணமெனும் தேன்கூட்டில் இன்பக் கனல் மூட்டுதடி! வான நிலாப்பெண்ணை வட்டமிட்டு மேகமொன்று மோன முகத்தினிலே முத்தமிட்டுப் போகுதடி! துள்ளிவிழும் நீரலையில் வெள்ளிமலர் பூத்ததடி வள்ளியுனை எதிர்பார்த்த மெல்லுடலும் வேர்த்ததடி! இல்லத்தில் நீயிருந்தால் இருள்வர அஞ்சுதடி மெல்லத் தமிழ்உனது சொல்லில் வந்து கொஞ்சுதடி (மின்னும்)

என்னை திருட்டு பொருளாய்..திருடி. திண்ணை இருட்டு நிலவாய் வருடி , தென்னை மரத்து கிளியாய் மருவி, பண்ணை மரத்து குயிலாய் கூவிய வளே…. மயிலிறகு உடையில் .. மாவிலை ஆபரணத்தில் , வெற்றிலை நிறத்தை வெளுக்க வைத்து சிவந்தவளே! நாளுக்கு நாள் மாறும்.. நாள் காட்டியில் இலக்கம். நானும் நீயும் சேர்ந்தால் மட்டும் கனவோடு காதல் …

மங்கல்யான் விட்ட அரசு..பல மங்கைகளின் மாங்கல்யம் கிடைக்க. உதவுமா? மல்லுவேட்டி மைனர்களே-எங்கள் கள்ளிக்காட்டு … இதிகாசம் உங்களுக்கு தெறியுமா? வாடிபட்டி காளையர்கள் வாசிங்டனில் …கால்பதித்தால் வாக்கப்பட்டு போவதற்கு வரதச்சனை தான் ..கௌரவமா? பட்டணத்தில் …தங்கியவர்கள் பட்டிக்காட்டை விரும்புவது. பாட்டன் பூட்டன் நிலத்துக்கும் பட்டாம்பூச்சி நிறத்துக்கும்! பக்குவமா சமஞ்சாலும்.. பசியோடு சமச்சாலும் .. பட்டினியா சம்சாரமாய் பலவருஷம் …

ஒரு வரியில் நீ எழுதிய கவிதை புன்னகை ஒரு சொல்லை நீ மௌனத்தில் மறைத்ததை சொல்லவும் வேண்டுமோ ? ஒரு வானில் ஒரு நிலவு உன் இரு விழிகளில் என்னுள்ளே உதயமாகுது ஆயிரம் நிலவு ! ~~~கல்பனா பாரதி~~~

நான் நிஜமாக காதலித்தேன் நீ நிழலாக காதலித்திருக்கிறாய் …..!!! நிஜமாக காதலித்த என்னை ஏனடி நிராகரித்தாய் …? உனக்கு மாயை காதல் பிடிக்குமோ ….? உன்னை காதலித்ததால் என் நிம்மதி தொலைந்து விட்டது – என்றாலும் என் காதல் தொலையவில்லை அதுவரை நான் காதலிப்பேன் …!!! கே இனியவன்

1 2

Hit Counter provided by technology news