கவிதை தொகுப்பு

டீக்கடை:-!! அந்த கிராமத்தில் அந்த டீக்கடை மிகவும் பிரபலம். அதிகாலை நேரமானதால் டீக்கடையைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது. ‘‘அண்ணே! நாலு டீ போடுங்கண்ணே? அதுல ஒண்ணு சீனி கம்மியா ஸ்டாங்கா இருக்கட்டும்.’’ ‘‘ஒரு ரெண்டு டீ போடு.’’ குரல் நாலாபுறம் இருந்தும் வந்தது. டீக்கடைக்காரர் கூட்டம் அதிகமாக இருந்தும் பதட்டப்படாமல் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, …

என் எழுதுகோல் அழுததெல்லாம் கவிதையென்றால்… இதோ…இன்று…அழுதழுது கண்ணீர் வற்றி காய்ந்து போகப் போகிறது சாய்ந்து போகப் போகிறது தன் கடைசிக் கவிதையை சொல்லிச் சொல்லி ஓய்ந்து போகப் போகிறது அறுபது பாகை கோணத்தில் அருந்தமிழ் பேசிய என் ஒட்டு விரல் படுக்கை நிலைக்கு போகிறது எங்கோ எடுத்து வீச ஏதோ ஒரு குப்பையில் என்னைப் பிரிந்து …

கவிதை எழுதும் ஒற்றைக்கால் அருவி….. உன்னைப் பற்றி எழுதும்போதெல்லாம் ஆர்ப்பரித்து சிரிக்கிறது இரட்டை கடலாய் விழிகளால் பேசி மொழி இழக்க வைக்கிறாய் எவ்வளவும் பேசியும் ஊமையாகி போகிறேன் உன்னிடம் காதல் மொழி பேசுகையில் மட்டும் …. என் பாதியான வாழ்க்கையை உன்னோடு மட்டும் முழுமையாக வாழ்ந்துவிடும் வரம் மட்டும் தந்துவிடு ……………. ஏங்கி நிற்கிறேன் இமைகளில் …

‘வேட்டி’ விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, “தமிழ்நாட்டுக்குள் பல பள்ளிக்கூடங்களில் தமிழே நுழைய முடியவில்லையே, என்ன செய்யப்போகிறோம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “வேட்டி கட்டிய நீதிபதி நிராகரிக்கப்பட்டது ஒரு நீதிபதியாக அல்ல என்று உயர் நீதிமன்ற அமர்வு கருத்துச் சொல்லியிருக்கிறது. நீதிபதியைக் கழித்துவிட்டாலும் அவர் …

குட்டிக் கரடி கற்ற பாடம் சித்திரமே என் கண்ணு சிந்திக்க சொல்வேன் கதை ஒன்னு ஊருக்கு வெளியே பெருங்காடு உள்ளே போவது பெரும்பாடு அங்கே ஒரு கரடிக்குட்டி அன்பால் அம்மாவிடம் வாழ்ந்திடுச்சாம் அவள் அறிவுரை கேட்டு நடந்திருச்சாம் காய்கறி கிழங்குகள் பல உண்டு கொழு கொழுனு வளர்ந்திருச்சாம் குரும்புக்காரக் குட்டிக்கு குள்ள நரி நட்பு கிடைசிருச்சாம் …

ஒரு பெண்ணின் குமுறல் காற்றும் வெயிலும் மழையும் அனுமதி இன்றி நுழையும் சாலை ஓரம் முளைத்த ஓலையில் கட்டிய குடிசை பகலவன் பணியை முடித்து தலை சாயும் நேரம் ……. உடைந்து பூசிய மண் அடுப்பு அதில் காய்ந்த வரட்டி மூன்று பொறுக்கி வந்த சுள்ளி விறகு பசித்தவன் வயிறு போல் வேகமாய் எரியுது அடுப்பு …

மனிதனை மனிதனாய் மதிக்க சொன்னாய் மடமையை ஒழிக்க படிக்க சொன்னாய் அறிவு தீபத்தை வளர்க்க சொன்னாய் அடிமையை வேரோடு அழிக்க சொன்னாய் ஒற்றுமை வேண்டுமென உரக்க சொன்னாய் தீண்டாமை கொடுமையை எரித்திட சொன்னாய அன்புக்கு மட்டும் பணிய சொன்னாய் அநியாயத்தை எதிர்க்க துணிவை சொன்னாய் எதிர்ப்புகளை எதிர்த்து எழிதியதை சொன்னாய் ஏழைகள் உயர்ந்திட எழுத்திலே சொன்னாய் …

லட்சியமில்லா அலட்சியவாதி…! லட்சங்கள் சம்பாதிக்க இயலா அவலட்சணன்…! வருமானம் இருந்தும் அவமானம் தான் பாக்கி….! வங்கியில் இருப்பு, சில ஆயிரங்களே பாக்கி……!! இளமையை இழந்த இலக்கணப் பிழை….! எழுத்துப் பிழை என்றும் எழுதாத, கருத்துமிக்க எதார்த்தவாதி…!! உடல் & மன நல விசாரிப்புகள் இல்லை. மண, பண & விசா அரிப்புகள்….! தன்னை மறந்த தன்னலமற்ற …

கால்முளைத்த கவிதையை கார்மேகம் கண்டது அழகை அள்ளியணைக்க ஆனந்தம் கொண்டது மல்லிகையை நனைத்திட மழையாய் வந்தது குழந்தையே நீ குடைபிடித்ததால் மழை கோபமாய் நொந்தது வானத்தாய் பால் தருவதற்கு பாய்ந்து வந்தது பார்த்து சிரித்துவிட்டு பருவமழை பாவமாய் நின்றது சொக்கவைக்க வந்தமழை சோகமாய் சென்றது குடைஇல்லாமல் வருவாய் குளிப்பாட்ட மீண்டும் வருவேன் என்றது அருவிக்கவிஞர் ஆனந்தரவி

வண்ணத்து பூச்சிகள் சிறகுகள் விரிக்குது வறுமையை விரட்ட வாழ்வுதேடி பறக்குது தொலைந்த வாழ்க்கையை தூய்மை ஆக்கவா தூய்மையான வாழ்வை முதுமையாய் போக்கவா விடியலை கானது வீட்டுக்குள் கிடக்கவா கனத்த மனதோடு காலத்தை கழிக்கவா உறவுகள் நலத்திற்கு ஓடாய் உளைக்கவா நாள்கணக்க உருகி நரகத்தை சுமக்கவா பாசத்தை சுமந்து பருவத்தை தொலைக்கவா சோகத்தை அணிந்து சொந்தங்கள் பிழைக்கவா …

ஊனமில்லை வீரத்தின் வெற்றிகால்கள் விஞ்ஞானத்தை வெல்ல விண்ணில் சுற்றுது வெற்றிகோள்கள் நேதாசியை நினைத்தால் நெஞ்சில் வருவதில்லை அச்சம் தேகத்தில் உள்ளது தேசத்திற்காக கடேசி உயிரின் மிச்சம் இழந்தோம் இணைந்திருந்த கால்கள் துடிக்கிறது துப்பாக்கி ஏந்திட தோள்கள் உயர்ந்த உச்சி உறையும் பனி உதிரத்தில் வெப்பம் தொல்லைகளை துரத்த எல்லையில் நிற்போம் நாட்டுக்காக இரவெல்லாம் விழிப்போம் நாட்டுக்குள் …

மருதாணி வைத்தாலே விரலுக்கு பிடிக்கும் மனதிற்கு பிடித்தால்தான் விரலிலே பிடிக்கும் விரல்நீட்டி பேசும்போது வெக்கப்பப்டு துடிக்கும் விழிபோல எப்போதும் பத்துவிரல் படிக்கும் கொஞ்சநாள் விடாமல் விரலிலே தங்கும் விழுந்தவுடன் வைக்கசொல்லி மறுபடியும் கெஞ்சும் பிரிமுள்ள உன்னைவிட்டு பிரிந்திட அஞ்சும் அதிகமாய் ஐய்விரல் அழகிலே மிஞ்சும் அருவிக்கவிஞர் ஆனந்தரவி

தமிழகமே இருட்டானது திருந்தாதநாடு திருட்டானது மிளிர்ந்த திருநாட்டில் மின்வெட்டு ஆனது காமராஜர் கனவுநாட்டில் கண்கெட்டு போனது அருவிக்கவிஞர் ஆனந்தரவி

1 2

Hit Counter provided by technology news