சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

கேரளாவில் மேற்குதொடர்ச்சி மலைத் தொடர்களுக்கு ஊடாக அமைந்திருக்கும் பாலக்காடு மாவட்டம் பரந்து விரிந்து கிடக்கும் பசுமையான நெல் வயல்களுக்காக மிகவும் புகழ்பெற்றது. கேரளாவின் அரிசி உற்பத்தியில் மிகப்பெரிய பங்காற்றி வரும் பாலக்காடு மாவட்டம் ‘கேரளாவின் நெற்களஞ்சியம்’ மற்றும் ‘தானியக் களஞ்சியம்’ என்ற சிறப்புப் பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த நகரம் உயர்ந்து நிற்கும் பனை மரங்களும், அடர்ந்த வெப்ப …

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது மாஞ்சோலை. திருநெல்வேலியிலிருந்து 3 மணி நேரப் பயணம். கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி வழியாகப் பல …

ஒரு நாள் முழுக்க இயற்கையை நேசிக்க கற்றுத்தரும் சுற்றுலாத் தலம் தான் தென்மலை. கூடவே பயணத்தின் இறுதியில் ரிலாக்ஸாக இசைப்பாடலுக்கு தகுந்தபடி நடனமாடும் நீருற்றையும் கண்டு ரசிக்க தென்மலையை விட்டால் வேறு இடம் கிடைக்காது.தென்மாவட்ட மக்களுக்கு மிகவும் அருகில் தான் உள்ளது இந்த சுற்றுலாத் தலம். அதாவது கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. குற்றாலத்திலிருந்து …

பொருளாதார வளர்ச்சி-இயற்கைச் சுரண்டல் மானுட வசதி, முதலாளிய பேராசை ஆகியவற்றிற்கு சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளும் காலங்காலமாக தத்துவவாதிகளும் எச்சரிக்கை விடுத்தும் மனித இனம் திருந்தியபாடில்லை. 2012ஆம் ஆண்டு புவிவெப்பமடைதலுக்குக் காரணமாகும் கரியமிலவாயு வெளியேற்றம் 2.6% அதிகரித்து 35.6 பில்லியன் டன்கள் கரியமிலம் அண்ட வெளிக்க்கு அனுப்பப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு வெளியேற்ற அளவைவிட 58% அதிகரித்துள்ளது. எதிர்கால சந்ததியினர் …

இணையதளம் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப சாதனங்களால் ஓராண்டுக்கு வெளிப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு 830 மில்லியன் டன் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. மேலும் இந்த அளவு வரும் 2020-ஆம் ஆண்டிற்குள் இரட்டிப்பாகும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது. தகவல் தொழில்நுட்ப ஆற்றல்-திறன் ஆய்வு மையம் மற்றும் பெல் ஆய்வுக் கூடம் சமீபத்தில் வெளியிட்ட …

புவி வெப்பமடைதல் விளைவான வானிலை மாற்றத்தினால் அருணாச்சலப்பிரதேசத்தின் நதிக்கரை கிராமங்கள் கடந்த சில பத்தாண்டுகளாக மூழ்கியுள்ளன. நதிகள் பல தங்களது பாதையிலிருந்து விலகியுள்ளது. கிராமங்கள் நீரில் மூழியதற்குக் காரணம் ‘திடீர் மழை வெள்ளம்’ என்றே அரசங்கம் கூறிவந்தது. பிக்ரம், ரங்கா, போகி உள்ளிட்ட நதிகள் அருணாச்சலப்பிரதேசட்தின் மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. இவை தங்களின் வழக்கமான பாதையில் மாற்றம் …

தமிழகத்தில் 2013-ம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 129 பேரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உடல் உறுப்பு தானம் 55 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெ.அமலோற்பவநாதன் தெரிவித்தார். தமிழகத்தில் மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்டம் 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் …

தமிழ்நாட்டில் பார்த்திராத பல இடங்கள் பல இருக்கின்றன. திரும்ப திரும்ப சென்ற இடங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், ஆண்டு தோறும் போய்வரும் ஒரு இடம் குற்றாலம். எப்பொழுது சீசன் களை கட்டுகிறதோ அப்பொழுது நண்பர்களுடன் குற்றாலத்திற்கு பஸ் ஏறிவிடுவதுண்டு! குற்றாலத்திற்கு முன்பே 5 கிமீ தொலைவில் இருக்கும் தென்காசியை அடையும் பொழுதே, குற்றாலத்தின் மணம் காற்றில் …

தமிழக மக்களால் மறக்க முடியாத தினங்கள் பல. அதில் ஒன்று தனுஷ்கோடியை கடல் தின்ற தினம். தமிழக கடலோரப் பகுதிகளை 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி ஆழிப் பேரலை புரட்டிப் போட்டு விட்டுப் போனதற்கு முன்பே, தனுஷ்கோடியை அந்த சுனாமி முத்தமிட்டு, விகாரமாக்கி விட்டுச் சென்ற தினம்தான் இன்று (டிசம்பர் 23). 1964ம் …

தென்மலை இயற்கை சூழல் மையம்- ஓங்கி உயர்ந்த மரங்கள் தென்மலை இயற்கை சூழல் மையத்தில் சுற்றுச்சூழல் அறநெறி அவைய அமைப்பாளர் அறநெறி முனைவர் க.பழனிச்சாமி தென்மலை இயற்கை சூழல் மைய மான் வனத்தில்

இந்தியாவில் மலை ரயில் பாதைகள் அமைக்கப்பட்டதில் மிகப்பெரிய அரசியல் பின்னணி உள்ளது. அதாவது இந்தியாவின் மலைப்பகுதிகளில் தங்களின் காலனியாதிக்கத்தை நிறுவுவதற்காகவும், அதன் மூலம் அவ்விடங்களில் இராணுவ தளத்தை அமைக்கவும் திட்டமிட்ட ஆங்கிலேயர்கள் மலைப்பாதைகள் அமைக்க முடிவெடுத்தார்கள். இதற்காக டார்ஜீலிங், சிம்லா, காங்ரா பள்ளத்தாக்கு, மாத்தேரான், ஊட்டி ஆகிய பகுதிகளை தேர்ந்தெடுத்தனர். இவற்றில் டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில்வே, …

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்திருப்பதால் வெள்ளிக் கிழமை பார்வையாளர்களுக்காக சரணாலயம் திறக்கப்பட்டுள்ளது. வேடந்தாங்கல் வனச்சரகர் தி.முருகேசன் சரணாலயத்தை திறந்து வைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியது: ஏரியில் நீர் குறைவாக இருந்ததால் பறவைகள் வரத்து குறைவாக இருந்தது. இதனால் சரணாலயம் திறப்பு தள்ளிப்போனது. தற்போது வளையபுத்தூர் ஏரியில் இருந்து வேடந்தாங்கல் ஏரிக்கு …

வால்பாறையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மேடு பள்ளங்களாக அந்த மலைப்பகுதியில் எங்கு நோக்கினும் பச்சை பசேலென்று கம்பளி போர்த்தப்பட்டது போல தேயிலைத் தோட்டங்கள். அதிகாலையில் பனி மூட்டம் மூடியிருக்கும் வேளையிலும் மழைக்காலங்களில் மேகங்கள் உருவாகி தேயிலைத் தோட்டங்களைத் தழுவிச் செல்லும் காட்சி கண்ணுக்கு விருந்து நெஞ்சிற்கு சுகம், கற்பனைக்கு ஊற்று.கோவை …

தேசிய அளவிலான புலிகள் கணக்கெடுப்புப் பணிக்காக, டிசம்பர் மாதம் 10 நாட்கள் புலிகள் காப்பகங்கள் மூடப்படுகின்றன. இந்தியாவின் தேசிய விலங்கான புலி, தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. இதனால், புலிகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த புலிகள் கணக்கெடுப்புப் பணி, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை …

காகிதம் கண்டுபிடித்து புழக்கத்திற்கு வருவதற்கு முன்பு வரை காகிதத்தின் மாற்றுப்பொருளாக பயன்பட்டு வந்தது ஓலைச்சுவடிகள்தான். கூர்மையான குச்சியை எழுதுகோலாகவும், பனை ஓலையை ஏடாகவும் பயன்படுத்தி வந்தனர் நம் முன்னோர்கள். திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர் கையில் இருக்கும் ஓலைச்சுவடிகள் காலத்தால் அழியாத சான்று! பண்டைய நூல்கள், குறிப்புகள், மருத்துவ முறைகள் ஆகியவற்றை ஓலைச்சுவடிகளில்தான் எழுதுவது வழக்கம். தற்பொழுது …

மஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் மஹாபலேஷ்வர் ஒரு பிரபலமான மலை வாசஸ்தலமாகும். ரம்யமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்தப் பகுதி உலகில் என்றென்றும் பசுமையாக காணப்படும் இடங்களில் ஒன்று. இந்தியாவின் மற்ற கோடை வாசஸ்தலங்களை போலவே மஹாபலேஷ்வர் நகரமும் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத இந்திய கோடை …

1 2 3

Hit Counter provided by technology news