தேனி மாவட்டத்தின் குற்றாலம் கும்பக்கரை

தேனி மாவட்டத்தின் குற்றாலம் கும்பக்கரை

தேனி மாவட்டத்தின் குற்றாலமாகத் திகழ்கிறது, கும்பக்கரை. இங்கு கொட்டும் நீர்வீழ்ச்சி, தென் மாவட்டப் பகுதி மக்களை பெருமளவில் ஈர்த்து வருகிறது. கும்பல்கரையே கும்பக்கரை என்று மருவியதாகக் கூறப்படுகிறது.

வன தெய்வங்களான மாட்சிநாயக்கன், வீரபுத்திரன், வைரவன், பூதநாட்சி, செழும்புநாட்சி, சோத்துமாயன், சின்ன அண்ணன், கருப்பணசாமி ஆகிய தெய்வங்கள் இங்குள்ள கரையில் கும்பலாகக் கூடுமாம். அதனால் இது கும்பல்கரை என்று முன்னர் அழைக்கப்பட்டுள்ளது.

theni_kumbakarai

இங்கு விழும் நீர்வீழ்ச்சி, கொடைக்கானல் அருகில் உள்ள பாம்பாறு பகுதியில் தோன்றி பாறைகளிடையே பாய்ந்து வந்து கொட்டுகிறது. குளிப்பதற்கும் கண்டுகளிப்பதற்கும் திகட்டாத நீர்வீழ்ச்சியாக இது அமைந்துள்ளது.

இந்நீர்வீழ்ச்சிக்கு முன்னாலும், சாலையின் இருபுறங்களிலும் மாந்தோப்புகள், தென்னந்தோப்புகள், பல்வேறு வகை மரங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியூட்டுகின்றன. மலைப் பகுதியில் நீண்ட தூரம் பயணித்து வருவதால் கும்பக்கரை அருவி நீர், மூலிகை மற்றும் தாதுப் பொருள்களின் நற்குணங்களை அள்ளிக் கொணர்ந்து சேர்க்கிறது.

இந்நீர்வீழ்ச்சியில் தண்ணீர் செல்லும் தடம், வழுக்குப் பாறை, யானைக் கெஜம், உரல் கெஜம், பாம்பு கெஜம் என்று அழைக்கப்படுகிறது. யானைக் கெஜம், உரல் கெஜம் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்கின்றனர்.
மழைக் காலத்தில் நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீர் அதிகமாகவும், கோடை காலத்தில் குறைவாகவும் இருக்கும். நீரின் வேகம் அதிகமாகும்போது அருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் கொடைக்கானல் அடிவாரத்தில் பள்ளத்தாக்குப் பகுதியில் கும்பக்கரை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மதுரையிலிருந்து 89 கி.மீ. தொலைவில் உள்ளது. விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

அருகில் உள்ள மக்கள், ஓர் உள்ளூர் சுற்றுலா போலச் சென்று ஒரு நாளை உல்லாசமாகக் கழிக்க ஏற்ற இடம் கும்பக்கரை.

1 Comment to “தேனி மாவட்டத்தின் குற்றாலம் கும்பக்கரை”

  1. xQrjkh zdgrqfqgqaiw, [url=http://ktsgmpftglrm.com/]ktsgmpftglrm[/url], [link=http://ffpvkuetsxmi.com/]ffpvkuetsxmi[/link], http://hcepoafxldxv.com/

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news