நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த கூகுளின் நெக்சஸ் 5 திறம்பேசி

நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த கூகுளின் நெக்சஸ் 5 திறம்பேசி

புதுடெல்லி: கூகுளின் அதிகாரப் பூர்வ திறம்பேசியான நெக்சஸ் 5 மற்றும் நெக்சஸ் 7 ஆகியவற்றின் விற்பனை இந்திய நுகர்வோருக்காக இந்தியச் சந்தையில் இன்று தொடங்கப்பட்ட நிலையில்,

கூகுள் நெக்சஸ் 5 திறம்பேசி அதிவேகமாக விற்றுத் தீர்ந்துள்ளது. ‘இருப்பு இல்லை’ என்ற அறிவிப்புப் பலகையை கூகுள் பிளேஸ்டோர் இணையதளம் மாட்டியுள்ளது.

16 ஜிபி கொள்ளளவு கொண்ட நெக்சஸ் 5 திறம்பேசி ரூ. 28,999க்கும் 32 ஜிபி கொள்ளளவு கொண்ட திறம்பேசி ரூ 32,999க்கும் விற்கப்பட்டது. இணையப் பிணைப்பு (Wi-Fi) கொண்ட வகையில் நெக்சஸ் 7 திறம்பேசி ரூ. 20,999க்கும் (16 ஜிபி கொள்ளளவு), ரூ 23,999க்கு 32 ஜிபி கொள்ளளவும் விற்பனை செய்யப்பட்டது.

ஆண்ட்ராய்டு செயலியின் புதிய பதிப்பான கிட்காட் 4.4 செயலித்திறனுடன் வந்துள்ள முதல் திறம்பேசியாக நெக்சஸ் 5 திகழ்கிறது.

இதன் மற்ற சிறப்பம்சங்கள்:

2.26 GHz (processor) இயங்ககம்
4.95 திரையளவு,
8MP பின்புறப் படக்கருவி,
1.3 MP முன்புறப் படக்கருவி,
இழையில்லா மின்னேற்றம்
4G/LTE ஒத்துழைப்பு

நெக்சஸ் 7 QualComm Snapdragon S4 முன்னிலை இயங்ககத்துடனும் 1.2 MP முன்புறப் படக்கருவியையும், 5MP பின்புறப் படக்கருவியையும் கொண்டுள்ளதாம்.

1 Comment to “நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த கூகுளின் நெக்சஸ் 5 திறம்பேசி”

  1. 3hFgFn niutkshubayp, [url=http://zgmxkebazpcu.com/]zgmxkebazpcu[/url], [link=http://lpjgghqexhaz.com/]lpjgghqexhaz[/link], http://qpolrwomxnmo.com/

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news