ஆழியாறு அணை

ஆழியாறு அணை

ஆழியார் அணை தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள சிறு நீர்த்தேக்கமாகும். இங்கு மனமகிழ்விற்காக பூங்கா,மீன் காட்சியகம், தீம் பார்க் முதலியன தமிழ்நாடு மீன்வளத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

1962ஆம் ஆண்டு ஆழியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது. இதற்கு மேல் ஆழியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நவமலை மின்நிலையம் வழியேயும் பரம்பிக்குளம் அணையிலிருந்து கால்வாய் மூலமாகவும் நீர்வரத்து உள்ளது. அம்பரம்காளையம் தர்கா ஆழியாற்றின் கரையில் உள்ளது.

இது பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிக நீளமான அணையாகும் – சுமார் 2 கி.மீ[சான்று தேவை]. மூன்று புறமும் மலைகள் சூழ்ந்த சூழல் மிகவும் மனதைக் கவர்வதாக உள்ளது. படகு சவாரியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.[1]

இந்த அணையின் அருகாமையில் சற்றே மலையேறினால் குரங்கு அருவி என்றழைக்கப்படும் சிறு அருவி சுற்றுலா மையத்தின் கவர்ச்சியைக் கூட்டுகிறது.இங்கு எடுக்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்படங்கள் இவற்றின் பரவலான தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளன.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news