ஷெரில் சாண்ட்பெர்க் – இவரைத் தெரியுமா?

ஷெரில் சாண்ட்பெர்க் – இவரைத் தெரியுமா?

$ ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ).

$ அமெரிக்க-யூத பெற்றோருக்கு மகளாக பிறந்த இவர் தனது கடின உழைப்பால் 44-வது வயதில் கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார்.

$ ஓராண்டுக்காலம் மெக்கின்ஸி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். 1996 முதல் 2001 வரை அமெரிக்க நிதி அமைச்சர் லாரி சம்மர்ஸ் அலுவலகத்தில் பணியாற்றினார்.

$ 2001-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் குளோபல் ஆன்லைன் விற்பனை பிரிவின் தலைவராக பணியில் சேர்ந்து 2008-ம் ஆண்டு வரை அந்நிறுவனத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தார்.

$ ஃபேஸ்புக் நிறுவனர் ஸூகர்பர்க் 2008-ம் ஆண்டு டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார பேரவை மாநாட்டில் இவரை சந்தித்து ஃபேஸ்புக்கில் பணியில் சேர அழைப்பு விடுத்தார்.

$ இவர் சேர்ந்த பிறகு ஃபேஸ்புக் நிறுவனம் லாபமீட்டத் தொடங்கியது.

$ பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள இவர், ஹார்வர்ட் பல்கலை பேராசிரியர் லாரி சம்மர்ஸுக்கு உதவியாக உலக வங்கியின் திட்டப் பணியில் பணியாற்றினார். இந்தியாவில் நிலவும் சுகாதார சூழல், தொழுநோய், எய்ட்ஸ், பார்வைக் கோளாறு தொடர்பான ஆய்வுகளை நடத்தியுள்ளார்.

$ தனது சொத்தில் பெரும்பகுதியை நன்கொடைக்கு அளிக்கப் போவதாக உறுதிமொழி எடுத்துள்ள பில் கேட்ஸ், மிலிண்டா கேட்ஸ் வரிசையில் இவரும் இணைந்துள்ளார். இத்தகைய கொடையாளர்களை திரட்டும் பணியிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

2 Comments to “ஷெரில் சாண்ட்பெர்க் – இவரைத் தெரியுமா?”

  1. QaRnr4 wblkwiwamdsc, [url=http://tnypdxbtbiqx.com/]tnypdxbtbiqx[/url], [link=http://tktagbxejjbg.com/]tktagbxejjbg[/link], http://mbvqdzzokvac.com/

  2. Plsaeing to find someone who can think like that

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news