கட்டுப்பாடு, வசதிகள் இல்லை குற்றாலத்தில்: அருவியில் கரைந்த ஐகோர்ட் உத்தரவு

கட்டுப்பாடு, வசதிகள் இல்லை குற்றாலத்தில்: அருவியில் கரைந்த ஐகோர்ட் உத்தரவு

திருநெல்வேலி: குற்றாலத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், சில கட்டுப்பாடுகளை விதித்தும் ஐகோர்ட் உத்தரவிட்டது. அதை பேரூராட்சியினர், போலீசார், பொதுமக்கள் கண்டுகொள்ளவில்லை.

மதுரை ஐகோர்ட் கிளையில் ஆர்.கிருஷ்ணசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவேண்டும். சுகாதாரம், மதுக்கடைகள், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைத்தார். இதனை விசாரித்த, நீதிபதிகள் கிருபாகரன், வைத்தியநாதன் அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ வக்கீல்கள் வெங்கட்ரமணா, அருணாச்சலம் ஆகியோரை நேரடியாக சென்று விசாரிக்க உத்தரவிட்டனர். வக்கீல்கள் குழுவினரும் நேரடியாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தனர். டிவிஷன் பெஞ்ச் குற்றாலத்தில் நடைமுறைப்படுத்தவேண்டிய 32 விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி அருவிகளில் குளிக்கும் போது, எண்ணெய், ஷாம்பூ, சோப், ரசாயனப் பொருட்கள், சிகைக்காய், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், துணிகள் சுத்தம் செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. அதிகாரிகள் இதை கண்காணிக்க வேண்டும். கண்டுபிடித்து, பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை, போலீஸ் பாதுகாப்பு, அருவிகளில் கண்காணிப்பு கேமரா, பெண்களுக்கு உடைமாற்றும் அறை, டாஸ்மாக் கடைகள் கண்காணிப்பு, பொது இடங்களில் மது அருந்த தடை உள்ளிட்டவற்றை வலியுறுத்தினர். ஆனால் நேற்று குற்றாலத்தில் பல விஷயங்கள் மாறவில்லை. அதனை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகளோ, போலீசாரோ கூட அங்கு இல்லை. வழக்கம்போல மெயின் அருவி பூங்கா பராமரிப்பின்றி குப்பைகள் கூட அள்ளப்படாமல் கிடந்தது. மெயின்அருவிக்கு அருகே தென்காசி எம்.எல்.ஏ., சரத்குமார் அமைத்துக்கொடுத்த (அவரே பராமரிப்பதாகவும் சொன்ன) கட்டண நவீன கழிப்பறை பயனின்றி அலங்கோலமாக உள்ளது. குற்றாலம் பேரூராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாயில் ஒன்றில் கூட தண்ணீர் வரவில்லை. மெயின்அருவி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை வழக்கத்திற்கு முன்னதாக திறந்து விற்பனை நடந்தது. ஆனால் பெட்டிக் கடைகளில் ஷாம்பு, சிகைக்காய் போன்றவை விற்பனை செய்யப்படவில்லை. பழைய குற்றாலத்தில் உயர்மின்விளக்கு கோபுரம் பழுதுபட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. வக்கீல்கள் குழு இதனை சரிசெய்ய கேட்டிருந்தது. அந்த விளக்கும் உடைந்து கீழே தொங்கிக்கொண்டிருக்கிறது. சுற்றுலா பயணிகளிடம் வாகன நுழைவு கட்டண வசூல் உள்பட பலவகைகளிலும் பணத்தை பறிக்கும் பேரூராட்சியோ, குத்தகை தாரர்களோ குற்றாலத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கை எடுக்காமல் பயணிகளை முகம்சுளிக்கச் செய்கின்றனர்.

பொதுமக்களுக்கும் பங்கு:

குற்றாலத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பங்கு சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் கூட இருக்கிறது. ஆனால் தண்ணீர்தட்டுப்பாடு காரணமாக உள்ளூர் மக்கள் துணிமணிகளை மூடை மூடையாக கட்டிவந்து மெயின் அருவி நீரோடையில்தான் துவைக்கின்றனர். ஷாம்பு, சிகைக்காய்க்கு தடை போட்டாலும் மொத்த மொத்தமாக கையோடு கொண்டு வந்து மாசுபடுத்துகிறார்கள். மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் விடும் நிலை உள்ளது. யாருமே ஒத்துழைப்பு தராததாலோ என்னவோ ஜூன் மாதம் முடியும் தருவாயிலும் குற்றாலத்தில் சீசன் களைகட்டவில்லை. இயற்கையும் ஒத்துழைப்பு தரமறுக்கிறது போலும். kutralam1979

2 Comments to “கட்டுப்பாடு, வசதிகள் இல்லை குற்றாலத்தில்: அருவியில் கரைந்த ஐகோர்ட் உத்தரவு”

  1. HI6Tbz kffvenlnjnqv, [url=http://lxpjgtgvxzkx.com/]lxpjgtgvxzkx[/url], [link=http://nxctivgbvzqi.com/]nxctivgbvzqi[/link], http://xdzyeaiepmjt.com/

  2. What a plrausee to meet someone who thinks so clearly

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news