போய் வருவோமே தேக்கடிக்கு …

போய் வருவோமே தேக்கடிக்கு …

உயரம் : கடல் மட்டத்திலிருந்து 900 – 1800 மீட்டர்.
மழைப்பொழிவு : 2500 மி.மீ
elephants_at_thekkady_48

தேக்கடி என்றதுமே யானைகள், முடிவில்லா சங்கிலித் தொடர் போன்ற குன்றுகள், நறுமணமூட்டும் வாசனை பொருட்களின் தாவரங்கள் ஆகியவை நம் கண்முன் விரியும். இங்குள்ள பெரியார் வனவிலங்கு சரணாலயம் இந்தியாவின் மிகச்சிறந்த சரணாலயங்களுள் ஒன்றாகும். மேலும் இந்த மாவட்டம் முழுவதும் அழகிய தாவர வாசனைகள், மலையேற்றத்திற்கு ஏற்ற குன்று நகரங்கள் என்று காணுமிடமெங்கும் அழகின் மறுமவதாரமாகக் காட்சி அளிக்கும்

சாலை
குமுளியிலிருந்து வெவ்வேறு சுற்றுலாதளங்களுக்குச் செல்ல அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. (4 கி.மீ தொலைவு).

thekkady_b

தேக்கடியிலிருந்து முக்கியமான சில நகரங்களுக்கிடையிலான தொலைவு.

குமுளி : 4 கி.மீ (15 நிமிடங்கள்) சபரிமலை வழி.
புல்லுமேடு : 50 கி.மீ. (2 மணி நேரம்).
இடுக்கி : 65 கி.மீ (2 1/2 மணி நேரம்).
மூணாறு : 106 கி.மீ. (4 மணி நேரம்).
குமாரகோம் : 128 கி.மீ (4 மணி நேரம், சபரிமலை வழி).
எருமெலி : 134 கி.மீ (4 மணி நேரம்).
கொடைக்கானல் : 149 கி.மீ (5 மணி நேரம்).
ஆலப்புழா : 164 கி.மீ ( 5 மணி நேரம்).
கொல்லம் : 220 கி.மீ ( 6 மணி நேரம்).
ஊட்டி : 390 கி.மீ (11 மணி நேரம்).

குமுளியிலிருந்து பேருந்து புறப்படும் நேரம்.

தேக்கடி 9.30, 10.45, 11.30, 12.00, 12.30, 13.30, 15.30 மணி.
குமாரகோம் : 7.00 மணி.
மூணாறு : 6.00, 9.45, 13.30 மணி.
எர்ணாகுளம் : 7.00, 13.30, 15.15, 16.30, 17.15, 19.30 மணி.
திருவனந்தபுரம் : (குமுளியிலிருந்து) 8.40, 15.30, 16.15, தேக்கடியிலிருந்து 8.20, 15.15 மணி.
கோட்டயம் : அடிக்கடி பேருந்து வசதி உண்டு.
ஆலப்புழா: 11.15 மணி.
சேர்த்தலா: 14.15 மணி.
இடுக்கி: அடிக்கடி பேருந்து வசதி உண்டு.
சென்னை : 16.30, 19.00 மணி.
பாண்டிச்சேரி : 16.30 மணி.
மதுரை : 0115, 0515, 0525, 0645, 0716, 0720, 0730, 0755, 0835, 0940, 1030, 1045, 1120, 1155, 1300, 1315, 1320, 1420, 1515, 1540, 1550, 1650, 1705, 1800, 1840, 1905, 2045 மணி நேரம்

Thekkady

திண்டுக்கல் : அடிக்கடி பேருந்து வசதி உண்டு.

கொடைக்கானல் : குமுளியிலிருந்து கொடைக்கானலுக்கு நேரடி பேருந்து வசதி இல்லை. திண்டுக்கல் பேருந்து மூலம் நீங்கள் வத்தலகுண்டு வரை சென்றால் அங்கிருந்து கொடைக்கானலுக்கு (149 கி.மீ) அடிக்கடி பேருந்து வசதி உண்டு.
திருச்சி : 0855, 1045, 1925 மணி நேரங்களில்
பழனி : 0930, 1135, 1830, 1850 மணி நேரங்களில்

தாவரங்கள்
171 புல் வகைகள், 143 மல்லிகை வகைகள் உட்பட 1965க்கும் மேலான பூக்கும் தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன.

விலங்குகள்
பாலூட்டிகள் : காட்டு யானை, சிறுத்தைப்புலி, சாம்பார் மான் மற்றும் காட்டுப்பன்றி போன்ற 35 வகையான விலங்குகளை நாம் நீலகிரி தார் பகுதியில் படகுகளில் செல்லும்போதும் உயரமான பாறை நிலப்பகுதியில் செல்லம்போதும் காணலாம். மிகவும் அடர்ந்த நடு காட்டுப் பகுதிகளில் போனெட் மொகாக்கு, மலபார் ராட்சத அணில், பறக்கும் அணில், புலி, காட்டுப்பூனை, தேவாங்கு போன்றவை காணப்படுகின்றன.

பறவைகள் : வெளி நாடுகளிலிருந்து வந்த பறவைகளோடு சேர்ந்து 265 வகை பறவைகள் உள்ளன. ஹார்க்பில், ஸ்டார்கி, மரங்கொத்தி, கிங்பிஷ்சர், ராப்டார், கார்மோரன்ட், கிராக்கிள் மார்டர் முதலியன.

ஊர்வன : நல்ல பாம்பு, விரியன் பாம்பு, கரு நாகம், விஷமில்லாத பல விலங்குகள் மற்றும் ராட்சத பல்லி ஆகியவையும் இங்கு உள்ளன.

நீரில் வாழ்வன : தவளைகள், தேரைகள், காலில்லா காயிசிலியன்கள், பல வண்ண மலபார் வழுக்குக் தவளை, இந்திய தேரைகள், பங்காய்டு தவளைகள் இரு வண்ண தவளை.

மீன்கள் : பெரியார் ஏரி மற்றும் ஓடைகளில் பல்வேறு வகை மீன்கள் காணப்படுகின்றன. மாஷீர் என்னும் மிகவும் பயங்கரமான விளையாட்டு மீன் வகை மீனும் உண்டு. ஏரிகளில் காணப்படும் ஒரே பாலூட்டி வகையைச் சார்ந்த ஓட்டர்-ஐயும் படகு சவாரி செய்யும்போது காண முடியும்.

தாவர வகைகள் : தேயிலை, ஏலக்காய், மிளகு மற்றும் காப்பி, பயிர்கள், பெரியார் வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.

சரணாலய கவனிப்பு கோபுரங்கள்: பெரியார் காட்டின் உள்பகுதியில் இரண்டு கவனிப்பு கோபுரங்கள் உள்ளன. ரிசர்வேஷன், காடுகள் தகவல் மையம், தேக்கடி, தொலைபேசி: 322028 மூலம் செய்யப்படுகிறது.

அனுமதி வழங்கும் அதிகாரம் : வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி, பெரியார் புலிகள் சரணாலயம், தேக்கடி.

2 Comments to “போய் வருவோமே தேக்கடிக்கு …”

  1. Q3WW33 bbydyzebwsxo, [url=http://inibofqcyjeq.com/]inibofqcyjeq[/url], [link=http://qpdvgrdbupmd.com/]qpdvgrdbupmd[/link], http://ubxucsbscpzr.com/

  2. I can’t hear anhyitng over the sound of how awesome this article is.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news