மங்கல்யான் விட்ட அரசு..பல மங்கைகளின் மாங்கல்யம் கிடைக்க. உதவுமா? – கவினர் மு.யாகூப் அலி.

மங்கல்யான் விட்ட அரசு..பல மங்கைகளின் மாங்கல்யம் கிடைக்க. உதவுமா? – கவினர் மு.யாகூப் அலி.

மங்கல்யான் விட்ட அரசு..பல
மங்கைகளின்
மாங்கல்யம் கிடைக்க.
உதவுமா?

மல்லுவேட்டி
மைனர்களே-எங்கள் கள்ளிக்காட்டு …
இதிகாசம்
உங்களுக்கு தெறியுமா?

வாடிபட்டி காளையர்கள்
வாசிங்டனில் …கால்பதித்தால்
வாக்கப்பட்டு போவதற்கு
வரதச்சனை தான் ..கௌரவமா?

பட்டணத்தில் …தங்கியவர்கள்
பட்டிக்காட்டை விரும்புவது.
பாட்டன் பூட்டன் நிலத்துக்கும்
பட்டாம்பூச்சி நிறத்துக்கும்!

பக்குவமா சமஞ்சாலும்..
பசியோடு சமச்சாலும் ..
பட்டினியா சம்சாரமாய்
பலவருஷம் …சாதனைதான்,

பல பிள்ளைகள் ஈன்றாளும் ..
சில பொழுது ஈக்களாய் …
உங்கள் கோபங்கள் ..
பிரசவ வேதனையை மிஞ்சும்!

காலம் மாறும் ..போது-எங்கள்
கானல் இன்னும் ..
கண் இமைக்குள் ..
கனவுகளும் மூழ்கிடும்,

நயாகார நீரின்றியும் அழகு..
வயதானோர்க்கு ..எங்கள்
வயதுகள் போனாலும் அழகு.
இளைஞர்களே ..கவனம் ..

உங்கள் கனவு நாயகியாய்
எங்கள் அழகு நயப்படும்-நாளை உங்கள் தந்தைக்கு தாரமாகி ..
கைக்கூலி பாதிப்பில் ,ஆவோமே

( இளம் தாயாகி…!)

– கவினர் மு.யாகூப் அலி.

2 Comments to “மங்கல்யான் விட்ட அரசு..பல மங்கைகளின் மாங்கல்யம் கிடைக்க. உதவுமா? – கவினர் மு.யாகூப் அலி.”

  1. d6dzFy iydquqapxztg, [url=http://mtuqoauwvgbo.com/]mtuqoauwvgbo[/url], [link=http://qrihzpsrywgx.com/]qrihzpsrywgx[/link], http://cybyhsmgqgcb.com/

  2. I found myself nodding my noggin all the way thugorh.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news