தமிழகத்தில் அரசுத் துறைகளில் 4963 இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு அறிவிப்பு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

தமிழகத்தில் அரசுத் துறைகளில் 4963 இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு அறிவிப்பு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட 4 ஆயிரத்து 963 காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. இளநிலை உதவியாளர் -(பிணையமற்றது): 2,133 இடங்கள்.

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

2. இளநிலை உதவியாளர்-(பிணையம்):39 இடங்கள்.

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

3. பில் கலெக்டர்- 22 இடங்கள்.

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

4. டைப்பிஸ்ட்-1683 இடங்கள்.

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

5. ஸ்டெனோ டைப்பிஸ்ட்: 331 இடங்கள்.

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.

6. பீல்டு சர்வேயர்: 702 இடங்கள்.

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

7. டிராப்ட்ஸ்மேன்: 53 இடங்கள்.

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

கல்வித்தகுதி:

14.10.2014ன்படி (மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து பணிகளுக்கும்). எஸ்எஸ்எல்சி அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். எஸ்எஸ்எல்சியில் தேர்ச்சி பெறாமல் திறந்தவெளி பல்கலைக்கழகம் உள்ளிட்ட அஞ்சல் வழிக்கல்வி மூலம் உயர் கல்வித்தகுதியை பெற்றிருந்தாலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.

தொழில்நுட்ப தகுதிகள்:

1. டைப்பிஸ்ட்:

அ. தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் உயர்நிலை/ சீனியர் நிலை அல்லது

ஆ. தமிழில் உயர்நிலை/ சீனியர் நிலை மற்றும் ஆங்கிலத்தில் கீழ்நிலை/ ஜூனியர் நிலை அல்லது

இ. ஆங்கிலத்தில் உயர்நிலை/ சீனியர் நிலை மற்றும் தமிழில் கீழ்நிலை/ ஜூனியர் நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. ஸ்டெனோகிராபர்: டைப்பிங் மற்றும் சுருக்கெழுத்தில்

அ. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை/ சீனியர் நிலை அல்லது

ஆ. தமிழில் உயர்நிலை/ சீனியர் நிலை மற்றும் ஆங்கிலத்தில் கீழ்நிலை/ இளநிலை அல்லது

இ. ஆங்கிலத்தில் உயர்நிலை/ சீனியர்நிலை மற்றும் தமிழில் கீழ்நிலை/ இளநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் படிப்பில் சான்றிதழ் படிப்பு விரும்பத்தக்கது.

வயது:

01.07.2014 தேதியின்படி பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 30க்குள். எஸ்சி., எஸ்டியினர் 35 வயது வரையிலும், பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர் 32 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை விட கூடுதலாக கல்வித்தகுதி (பிளஸ் 2 அதற்கு மேலும்) பெற்ற பொதுப்பிரிவினர் தவிர இதர பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.

விண்ணப்ப கட்டணம்:

(மொத்தம் ரூ.75 + 50). தேர்வு கட்டணம்: ரூ.75. விண்ணப்ப கட்டணம்: ரூ.50. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் விலக்கு உண்டு. இதுகுறித்த விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கவும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்களை பார்க்கவும்.

விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்: 14.11.2014.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.11.2014.

2 Comments to “தமிழகத்தில் அரசுத் துறைகளில் 4963 இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு அறிவிப்பு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்”

  1. ury2s3 qgvbqfelpxha, [url=http://yfdeamhnchpo.com/]yfdeamhnchpo[/url], [link=http://enlevrrzxzua.com/]enlevrrzxzua[/link], http://rfsuycefujbz.com/

  2. HBZVjv qhevngzbfjru, [url=http://mzyapbgfjyaf.com/]mzyapbgfjyaf[/url], [link=http://culqpjjcepvt.com/]culqpjjcepvt[/link], http://apwqqrpmsuio.com/

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news