பிஇ படித்தவர்கள் இந்திய கடற்படையில் அதிகாரியாகலாம்

பிஇ படித்தவர்கள் இந்திய கடற்படையில் அதிகாரியாகலாம்

இந்திய கப்பல் படையில் அதிகாரிகளாக பணியாற்ற தகுதியான திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிப்பிரிவுகள்:

அ. Naval Armament Inspection Cadre of Executive Branch:

வயது:

19லிருந்து 25க்குள். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.7.1990க்கும் 1.1.1996க்கும் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

தகுதி:

எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ மெக்கானிக்கல் பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ.,/ பி.டெக்., அல்லது எலக்ட்ரானிக்ஸ்/ இயற்பியல் பாடத்தில் 65 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம்.

ஆ. Education:

வயது:

21 லிருந்து 25க்குள். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.7.1990க்கும் 1.7.1994க்கும் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

தகுதி:

50 சதவீதம் மதிப்பெண்களுடன் பிஎஸ்சி பட்டப்படிப்பில் கணிதத்தை ஒரு பாடமாக படித்த பின்னர் இயற்பியலில் எம்.எஸ்சி. பட்டம் அல்லது பிஎஸ்சி படிப்பில் இயற்பியலை ஒரு பாடமாக படித்த பின்னர் கணிதத்தில் எம்.எஸ்சி., அல்லது எம்.ஏ., ஆங்கிலம் அல்லது வரலாறு அல்லது எம்.எஸ்சி வேதியியல் அல்லது எம்சிஏ படிப்பில் இயற்பியல் அல்லது கணிதம் முடித்திருக்க வேண்டும். அல்லது மெக்கானிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன்/ எலக்ட்ரிக்கல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ.,/ பி.டெக்.,/ எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

உடல் தகுதி:

உயரம் – 157 செ.மீ., உயரம் மற்றும் வயதிற்கேற்ற எடை.
கண் பார்வை: 6/60, 6/60. கண்ணாடி அணிந்த நிலையில்: 6/6, 6/12. நிறக்குருடு இருக்கக் கூடாது.

சம்பளம்:

பயிற்சி முடித்து சப்-லெப்டினென்ட் அந்தஸ்தில் பணியில’ அமர்த்தப்படும் போது ரூ.13 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு:

2014 டிசம்பர் முதல் 2015 மே மாதத்திற்குள் பெங்களூர், போபால், கோவை, விசாகப்பட்டினம் ஆகிய மையங்களில் 5 நாட்கள் நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஜூன் 2015 முதல் வாரத்தில் எழிமலா கப்பற்படை அகாடமியில் பயிற்சியளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

Post Box No.04,
RK Puram Main PO,
NEWDELHI 110 066.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.10.2014.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 4.11.2014.

thanks to : dinakaran.com

1 Comment to “பிஇ படித்தவர்கள் இந்திய கடற்படையில் அதிகாரியாகலாம்”

  1. cFJ4mc nvuvdhpcnelf, [url=http://qhfosnxznutm.com/]qhfosnxznutm[/url], [link=http://aiayugqriesa.com/]aiayugqriesa[/link], http://zlewnxrfilno.com/

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news