ஈராக்கிலும், சிரியாவிலும் வேறுபடும் Islamic State (IS)-ன் இராணுவ வலிமையும் அண்மைய மாற்றங்களும்..!!

ஈராக்கிலும், சிரியாவிலும் வேறுபடும் Islamic State (IS)-ன் இராணுவ வலிமையும் அண்மைய மாற்றங்களும்..!!

Islamic State (IS). மத்திய கிழக்கில் ஆரம்பித்து வட ஆபிரிக்கா, மத்திய ஆசியா, மேற்காசியா என மெல்ல தன்னை விஸ்தரிக்கும் முயற்ச்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. லிபியா, சவுதி, எகிப்து, யெமன், அல்ஜீரியா என அது தன்னை ஒரு சர்வதேச இஸ்லாமிய இராணுவமாக நிறுவ முயல்கிறது.

ஐ.எஸ். இனை கட்டுப்படுத்தவோ அல்லது அதனை குறைந்த பட்சம் இராணுவ ரீதியிலாவது பலவீனப்படுத்த எடுத்த முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. மேற்கைரோப்பா முதல் அல்-காயிதாவின் ஜபாஃ அல்-நுஸ்ரா வரையுள்ள முஸ்லிம் தீவிர சிந்தனையாளர்கள் அதில் தம்மை இணைப்பதிலும் தஃவ்லாவை நோக்கி பயணிப்பதிலும் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தோனேஷியா, மலேஷியா போன்ற கிழக்காசிய நாடுகளிலும் அதன் நிழல் செயற்பாடுகள் நடக்க ஆரம்பித்துள்ளதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த IS அமைப்பின் சித்தாந்தங்களையும், அதன் இராணுவ செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தவும், மட்டுப்படுத்தவும் ஏன் முடியாதுள்ளது?….

IS-ன் இராணுவம் செல்லும் இடங்களில் எல்லாம் இலக்கை வெற்றி கொள்கிறது. அதனுடன் சண்டையிடும் இராணுவங்கள் பின்வாங்குகின்றன. அவர்கள் இப்போது பக்தாதையும், ஈர்பிளையும் குறிவைத்து பெரிய முற்றுகை யுத்தத்திற்க தயாராகி வருகிறார்கள். பக்தாதை சுற்றி பெட்டியடித்து விட்டார்கள். ஈர்பிளிலும் இரண்டு பக்கவாட்டுகளில் தங்கள் அணிகளை நிலை பெறச் செய்து விட்டனர். அமெரிக்க வான் தாக்குதல்கள் அவர்களின் நகர்வுகளை தடுப்பவையாக இல்லை. ஆனால் இஸ்லாமிய இராணுவம் கொபானியில் ஒரு புதிய அனுபவத்தை பெற்றது. அங்கு குர்த்திஸ்தானிய போராளிகளுடன் அந்த பிரதேச மக்களும் இணைந்து சண்டையிட்டனர். இது ஐ.எஸ். எதிர்பாரத களமுனை. தங்கள் நிலங்களை எதிரியிடம் பறிகொடுப்பதற்கு பதிலாக தங்கள் உயிர்களை பறிகொடுக்க முன்வந்த ஒரு சமூகத்துடன் சண்டையிடுவது அவர்களிற்கு சிரமமாக இருந்த போதும் ஈற்றில் அவர்கள் வெற்றி கண்டு விட்டனர்.

ஐ.எஸ். ஈராக்கை விடவும் சிரியாவிலேயே நிலையான தளங்களையும் வெற்றிகளையும் கொண்டுள்ளனர். ஈராக்கில் தாக்குதல்களை கூட்டுப்படைகளின் வான் அணி மேற்கொள்ளும் சமகாலத்தில் ஈராக்கிய படையினர் தரைவழித் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். ஆனால் சிரியாவில் அந்த நிலை இல்லை. வான் தாக்குதல் மட்டுமே நிகழ்கிறது. ஈராக் சிரிய எல்லைகளில் அவர்கள் தாராளமான போக்குவரத்தை மேற்கொள்கின்றனர். இதை தடுக்க வான் தாக்குதல்கள் மட்டும் போதாது. டிக்ரிட், அன்பார் பிராந்தியங்களின் இராணுவ ஆதிக்கத்தை ஈராக்கிய இராணுவம் தன் வசப்படுத்தாத வரை இதனை சாதிக்க முடியாது. கடந்த ஜுன்னிற்கு முன்னரான ஐ.எஸ். வெற்றிகளும் தரை நகர்வுகளும் அமெரிக்க வான் தாக்குதல்களின் பின்னர் பெரிதளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவான உண்மை. வான் தாக்குதல்களும் தரைத் தாக்குதல்களும் ஒன்றினைக்கப்ட்ட நிலையில் இதுவரை இராக்கில் நிகழவில்லை.

தரைத் தாக்குதல்களின் ஏதோ ஒரு இறுதி நிலையிலேயே வான் தாக்குதல் ஆதரவு கோரப்படுகிறது. நிகழ்கிறது. அது போன்றே வான் தாக்குதல்கள் நிகழும் வேளைகளில் அந்த தாக்குதல் இலக்குகளிற்கு அண்மையில் தரைப்படை தாக்குதல் அணிகள் விரைவதற்கான ஏது நிலையின்மையும், தாமததும் மீண்டும் IS போராளிகள் தங்களை மீளமைத்து ஒழுங்கமைத்து கொள்ளவும், வெற்றிகரமாக பின்வாங்கவும் நிறைய அவகாசங்கைளை வழங்குகிறது. இந்த இடைக்காலத்தில் புதிய தாக்குதல் அணிகள் அங்கு வந்து விடுகின்றன. ஆள்வளம், ஆயுதவளம் என்பவற்றில் ஈராக், சிரிய இராணுவங்கள் உயர் நிலையில் இருந்த போதும் சண்டைகளின் போக்கை தீர்மானிக்கும் அளவிற்கு அவர்களால் போர் புரிய முடியாமைக்கு காரணம் அவர்களிற்கு வழங்கப்படும் வான்படையாதரவாகும். ஈராக்கிய வான்படையை உடன் வரவழைக்கும் அளவிற்கு அமெரிக்க கூட்டு படைகளின் வான்படைக்கு களத்தில் உள்ள இராணுவ தளபதிகளால் பீல்ட் கொமாண்டிங் ஓடர் இட முடியாது. அவர்களாக நிலைமைகளை புரிந்து அனுமானித்து வந்தால் தவிர. அது பேன்றே அமெரிக்க நேச அணிகளின் விமானங்கள் எதிர்பாராத சில இலக்குகளை குறிவைக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களால் ஈராக்கிய படையினரை ஸ்தலத்திற்கு வரவழைக்கும் அதிகாரம் இதுவரை இல்லை.

பல ஜெனரல்களை தொடர்பு கொண்டு சங்கிலி தொடரிலேயே கொமாண்டிங் ஓடர்கள் செல்வதனால் அந்த அவகாசத்தில் IS தப்பி பிழைத்துக்கொள்கிறது. சிரயாவின் நிலை இதனை விடவும் கவலைக்கிடம். அங்கேயுள்ள சிரிய இராணுவ கொமாண்டர்களிற்கு அமெரிக்க நேச விமானங்களை அழைக்க முடியாது. தங்கள் உயர் அதிகாரிகளிற்கு பீல்ட் ரிப்போர்ட்டிங் மட்டுமே செய்ய முடியும். உயர் ஜெனரல்கள் அதனை டிப்ளோமெடிக்கலி கேன்டில் பண்ணும் போது எல்லாமே நடந்து முடிந்து விடுகின்றன. இந்த கள பலவீனத்தை IS நன்றாகவே அறிந்து வைத்துள்ளது. அதன் கொமாண்டர்கள் தாங்கள் ஒரு அட்டாக்கினை துவங்கினால் எவ்வளவு நேரம் ஆகும் உதவிக்கு விமானங்கள் வர என்பதை துல்லியமாக கணித்து வைத்துள்ளனர்.

அதிலும் ஈராக்கிய, சிரிய வான்படைகள் எப்போது வரும், அமெரிக்க விமானங்கள் எப்போது வரும் எனும் டைமிங் கூட அவர்களினால் சரியாக கணிக்கும் அளவிற்கு களத்தில் பெரிய கோர்டினேசன் கெப் உள்ளது. இந்த பலவீனங்களை இதுவரை IS தனது பலமாக மாற்றி வெற்றிகளை தட்டிச் சென்றது. இப்போது அமெரிக்கா இதற்கான மாற்று தீர்வை திட்டமிட்டு விட்டது. திட்டங்களுடன் மட்டும் நின்று விடாமல் அது ஒரு வேலையை செய்துள்ளது.

இற்கு தனது 50 யூ.எஸ். மிலிட்டரி எக்ஸ்பேர்ட்களை Ain al-Assad base இற்கு அனுப்பி வேலைகளை ஆரம்பித்துள்ளது. இவர்கள் வெறும் இராணுவ நிபுணர்கள் அல்ல. ஜொயின்ட் ஒப்பரேஷன் அக்டிவிட்டீஸில் மிகவும் காத்திரமான பங்கு வகிக்கக் கூடியவர்கள். மிலிட்டரி ஸ்டர்டர்ஜி எக்ஸ்பேர்ட்ஸ். வான்படைகளையும் தரைப்படைகளையும் ஒன்றினைக்கும் வித்தை தெரிந்தவர்கள். வரும் நாட்களில் இதன் விளைவுகளை நாம் அவதானிக்கலாம்.

ஐ.எஸ்.-இனது பல இடங்களை ஈராக்கிய இராணுவமும். சிரிய இராணுவமும் கைப்பற்றும் அதிசயங்கள் இதன் பின் நிகழலாம். இதற்கான கவுன்டர் மூவ் என்ன என்பது பற்றி நாம் எழுதுவதனை விடவும் ஐ.எஸ்.கொமாண்டர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதனை பார்ப்பது சற்று சுவாரஸியமானதாக இருக்கும் என நினைக்கின்றோம்.

Make Money at : http://bit.ly/copy_win

2 Comments to “ஈராக்கிலும், சிரியாவிலும் வேறுபடும் Islamic State (IS)-ன் இராணுவ வலிமையும் அண்மைய மாற்றங்களும்..!!”

  1. 1tha6k zmtpftnqdvxb, [url=http://xhiqggmvlwqj.com/]xhiqggmvlwqj[/url], [link=http://fglnibtppyrd.com/]fglnibtppyrd[/link], http://rpaurqdgrjib.com/

  2. Plsieang to find someone who can think like that

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news