26/11 மும்பை தாக்குதல் ..

26/11 மும்பை தாக்குதல் ..

2008 உலகமே பார்க்கும் வண்ணம் அந்த கோர சம்பவம் அரங்கேறியது.. மும்பையின் இதயமான சிவாஜி ரயில் நிலையத்திலும் , தாஜ் ஹோட்டல்களிலும் இன்னும் சில இடங்களிலும் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் கிடத்தட்ட 155 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்..

6 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் இன்றும் கூட பல கேள்விகளுக்கு விடையில்லை.. அதுவும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்காரே உள்ளிட்ட போலிஸ் அதிகாரிகளின் மரணத்திற்கு கூட யார் காரணம் என்ற உண்மை இன்றுவரை வெளிவிடப்படாமல் நீதமான விசாரணை இல்லாமல் உண்மை குற்றவாளிகள் மறைக்கப்பட்டுவிட்டனர் என்பதே உண்மை..

அதுவும் இவர் தான் பார்ப்பனீய இயக்கங்களின் மற்றும் ராணுவ உடையில் இருந்து கொண்டு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு பார்ப்பனீய இயக்க கூட்டங்களுக்கு ராணுவத்தின் ஆயுதங்கள் முதல் பல உதவிகளை வழங்கி உதவிய கர்னல் புரோகித் என்ற தீவிரவாதியை பற்றிய உண்மையை கண்டறிந்தவர் .மேலும் நாட்டில் பல குண்டு வெடிப்புக்களுக்கு வேர்களாக இருப்பவர்கள் , பார்ப்பனீய இயக்க கூட்டங்களை பற்றிய உண்மைகளை கண்டறிந்த முதல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

தான் கொல்லப்படுவதற்கு முந்திய நாள் கர்காரே தன்னுடன் பேசியதாக காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய் சிங் கூறினார் . அன்று இந்துத்துவவாதிகள் தன்னை மிகவும் நெருக்கி வருவதாக கார்கரே அவரிடம் கூறியுள்ளார்.நரேந்திர மோதி கர்காரேயை ஒரு தேசத்துரோகி என்றும் குற்றம் சாட்டினார். அதன்பின் அவர் அளித்த ஒரு கோடி ரூபாயை வாங்கிக்கொள்ள கர்காரேயின் மனைவி மறுத்து விட்டார்.கர்கரே இறந்ததோடு அவர் பல ஆண்டுகால போராட்த்திற்கு பின்னர் கண்டறிந்த இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புக்களை பற்றிய உண்மைகளும் புதைந்து விட்டன..

அதை போல நரிமன் பாய்ன்ட் என்ற யூத வளாகத்தில் ஏற்பட்ட தாக்குதல்கள் ?? மும்பை தாக்குதலில் இஸ்ரேலிய தொடர்பு உள்ளிட்டவற்றை பற்றி எந்த ஒரு விசாரணையும் நிகழ்த்தப்படாமல் வழக்கம் போல சியோனிச / பார்ப்பனீய வாதிகளின் சதிகள் அனைத்தும் மறைக்கப்பட்டு விட்டன என்பதே உண்மை..

எப்படி இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புக்களை பற்றி குண்டு வெடிப்புக்களில் இறந்த அப்பாவி மக்களை பற்றி செய்திகளை வெறும் பரபரப்புக்காக மட்டும் ஊடகங்கள் சில நாட்களுக்கு வெளியிட்டு பின்னர் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்களை பற்றிய எந்த ஒரு நீதி விசாரணையும் இல்லாமல் குற்றாவளிகளை பற்றிய எந்த ஒரு உண்மைகளும் தெரியாமல் கோப்புக்கள் அறைகளில் தூங்குமோ அதை போன்ற நிலை தான் மும்பை குண்டு வெடிப்பிலும்..

கர்கரேயை கொன்றது யார் (WHO KILLED KARKARE) என்ற புத்தகத்தில் யாரெல்லாம் நாட்டில் அரங்கேற்றப்படும் சதிகளுக்கு காரணமாக இருக்கிறார்கள் எதனால் இதுவெல்லாம் அரங்கேற்றப்படுகிறது , இதனால யாருக்கு லாபம் என்ற பல கேள்விகளுக்கு … உண்மைகளை தெளிவாக தெரிந்து கொள்ளலாம் ..

thanks to : nsakhadir

2 Comments to “26/11 மும்பை தாக்குதல் ..”

  1. You’ve really imspresed me with that answer!

  2. xxxshowslive.ml,, [url=”http://xxxshowslive.ml/#6184″]xxxshowslive.ml,[/url], http://xxxshowslive.ml/#6184 xxxshowslive.ml,,

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news