இலவச சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சி!

இலவச சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சி!

சென்னை: ‘இல்மி’ என்ற கல்வி நிறுவனம் இலவச சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சியை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 2015

பயிற்சி நடைபெறும் இடம்: சென்னை,கோவை, திருச்சி, நெல்லை

தமிழக அரசின் காவல்துறைக்கு இவ்வாண்டு சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு 1000 பேர் எடுக்கவுள்ளனர். காவல் துறையில் நமது சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் எவ்வளவு முக்கியதத்துவம் வாய்ந்தது என்பது தங்களை போன்ற சமூக அக்கறை உள்ளவர்களுக்கு தெரியும்.

சமீபத்தில் கோயமுத்தூர் கலவரம் தொடங்கி S.P. பட்டணம் லாக்கப் படுகொலை வரை காவல்துறை உட்பட பல்வேறு அரசு துறைகளில் நமது சமுதாயம் அலைக்கழிக்கப்படுவதும் அநீதமிழைக்கப்படுவதும் அதைக்கண்டு நம்மவர்கள் அங்காலாய்ப்பதும் வழமையாகி விட்டது.

இந்த கொடுமைகளில் இருந்து விடுபட அல்லாஹ் கொடுத்த அரிய வாய்ப்புதான் இந்த சப் இன்ஸ்பெக்டர் தேர்வு .இதற்கு முன் இது போன்ற ஆக்கப்பூர்வமான வாய்ப்புகளை நமது சமுதாயம் முறையாக பயன்படுத்தியிருந்தால் இப்போது நாம் அனுபவித்து வரும் இந்த அவல நிலை நமக்கு ஏற்பட்டிருக்காது.(குறிப்பாக இதற்கு முன் 2009 ல் இதுபோன்று சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு தேர்வு நடந்தபோது தேர்வான 1000 பேரில் 2 பேர் மட்டுமே முஸ்லிம்கள் என்பது வேதனையில்லையா ?)

இந்த வேதனைகளை களைவதற்கான உருப்படியான முயற்சிகளில் ஈடுபட ILMI களமிறங்கி உள்ளது .இந்த தேர்வில் பங்கு பெற தேவையான அணைத்து பயிற்சிகளோடு சேர்த்து நேர்மையான இறையச்சமுள்ள காவல் அதிகாரிகளாக செயல் படுவதற்கு தேவையான இஸ்லாமிய தர்பியத் பயிற்சிகளையும் நமது சமுதாய இளைஞர்களுக்கு இலவசமாக வழங்க ILMI முன்வந்துள்ளது .அதற்காக சென்னை, கோவை, திருச்சி நெல்லை ஆகிய 4 நகரங்களில் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. சுமார் 1000 முஸ்லிம் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து குறைந்தது 100 பேரை வெற்றி பெற வைப்பது எங்கள் இலக்காகும் .

இந்த இலக்கை இலகுவாக அடைய பள்ளிவாசல் முதவல்லி கள் ,கண்ணியத்திற்குரிய இமாம்கள்,சமுதாய அக்கறையுள்ளவர்கள் அனைவரும் துஆ செய்வதுடன் இந்த அவசர செய்தியை முஸ்லிம் இளைஞர்களுக்கு தெரிவித்து அவர்களை ஊக்கமூட்டி உடனடியாக பதிவு செய்ய வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மிகக் குறுகிய கால அவகாசமே உள்ளது என்பதை நினைவுறுத்துகிறோம். அல்லாஹ் நமது முயற்சிகளை இக்ஹ்லாசான முயற்சியாக்கி வெற்றியை தருவானாக ஆமீன்.

மேலும் விவரங்களுக்கு: www.ilmi.co., Ph: 8122185932.

thans to: http://www.thoothuonline.com

2 Comments to “இலவச சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சி!”

  1. 27OOT2 atujmajycmtn, [url=http://stvbysrpidei.com/]stvbysrpidei[/url], [link=http://kocnpvgujirj.com/]kocnpvgujirj[/link], http://kyvyhhisnmti.com/

  2. Well I guess I don’t have to spend the weekend figirung this one out!

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news