மதங்களை வென்ற மனித நேயம்

மதங்களை வென்ற மனித நேயம்

மதங்களை வென்ற மனித நேயம்

பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி
பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 பேர் கொண்ட கும்பல் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அசிப்பூர் மீது தாக்குதல் நடத்தியது.

முன்னதாக கலவர கிராமத்தில் உள்ள இந்து சமுதாயத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் கடத்தி கொலை செய்ய பட்டதற்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக தவறான விசமத்தனமான செய்தியை பரப்பினர் ..இதனால் கோபமடைந்த கிராம வாசிகள் அசிப்பூர் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாயின.

இதில் அந்த கலவரத்தில் தனது இரண்டு மகள்களின் உதவியுடன், சயீல் தேவி முஸ்லீம் மக்களை காப்பாற்றியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, சிலர் தமது வீட்டிற்குள் நுழைந்து தேட முயன்ற போது தாம் அவர்களை தடுத்து இங்கு யாரும் இல்லை என்று கூறி கலவரக்காரர்களை அனுப்பியதாக கூறினார்.
அவர்களது நல்ல எண்ணத்தையும், தைரியத்தையும் பாராட்டி பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மன்ஜி ரூ.51,000 பரிசுத் தொகையை வழங்கினார். இந்த கலவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source : ஜாவித் கான் முகநூல் பக்கத்திலிருந்து ( https://www.facebook.com/javithkhanj )

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news