ஃபாலஸ்தீன வரலாறு

ஃபாலஸ்தீன வரலாறு

ஃபலஸ்தீன மண்ணில் தொடர்ந்து கொடுமைகள் இடம் பெற்று வருகின்றன. யூத சியோனிச அரச அந்தப் பூமியின் மைந்தர்களை படுகொலை செய்து வருகின்றது. தங்களுக்கு ஃபலஸ்தீன மண்ணில் ஓர் அங்குல உரிமை கூட பாராட்ட முடியாத நிலையில் சியோனிஸ்டுகள் அந்த மண்ணின் ஒரு பகுதியை அபகரித்து இஸ்ரேல் எனப் பெயர் சூட்டிக் கொண்டனர். இன்று இவர்கள் அபகரித்த பூமியை விஸ்தரிக்க பயங்கரவாதத்தை முடுக்கி விட்டுள்ளார்கள்.

தான் இழந்த பூமியை மீட்கப் போராடும் ஃபலஸ்தீனப் போராளிகளை பயங்கரவாதிகள் என அழைக்கிறது. இது அமெரிக்கா கற்றுக் கொடுத்த பாடம். எனவே பயங்கரவாதம் என்றால் என்ன யார் பயங்கரவாதி என்பவற்றை விளங்கிக் கொள்வதற்காக பலஸ்தீன் பற்றிய உண்மைகள் சிலவற்றை வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்வது அவசியம்.

ஃபலஸ்தீன மக்கள் தாயகமொன்று இன்றி தவித்தவர்கள் அல்லர். அடுத்தவரின் சொத்தை அபகரித்து தன் சொர்க்கபுரியை அமைத்துக் கொள்ள போராடியவர்களும் அல்லர். அவர்களுக்குத் தொன்மை மிக்க வரலாறொன்று இருக்கின்றது. அந்த வரலாறு பலருக்கு தெரியாததால் யூத சியோனிஸவாதிகள் ஃபலஸ்தீனை தனதாக்கிக் கொள்ள பின்கதவினை ஊடாக பிரவேசித்து அக்கிரமம் புரிந்து வருகின்றனர்.

யூத ஊடுருவல்கள்

ஃபலஸ்தீன மக்களின் மூதாதையர்கள் யபூஸியர் என அழைக்கப்படுகின்றனர். கி.மு. 4000 ஆண்டளவில் வாழ்ந்த அவர்கள் குத்ஸ் நகரை நிர்மாணித்தவர்களாவர். ஃபலஸ்தீனின் பூர்வீக சொந்தக்காரர்களான அவர்கள் ஃபலஸ்தீனின் பூர்வீக சொந்தக்காரர்களான அவர்கள் உருவாக்கிப் பின்பற்றிய பரம்பரை ஒழுங்கு அவர்களின் பின் சந்ததியினரான பலஸ்தீன் அரபுக்களால் கூட மிகச் சிறப்பாகப் பின்பற்றியதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

அந்த ஒழுங்கை சிதைந்து சின்னாபின்னமாக்கும் வகையில் கி.மு.1300 அளவில் யூதர்கள் (மூஸா நபியின் சமூகம்) முதன் முதலாக ஃபலஸ்தீனுள் பிரவேசிக்கின்றார்கள். சுமார் 200 வருட காலம் பல சர்ச்சைகளில் ஈடுபட்ட அவர்கள் இறுதியில் அங்கு வாழ்வதற்கான வழியை அமைத்துக் கொள்கிறார்கள்

எனினும் அவர்களது அந்த வாழ்வு வெகுகாலம் நீடிக்கவில்லை. கி.மு.8 ஆம் நூற்றாண்டில் அங்கு பிரவேசித்த அஸீரியப் படைகளும் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் அங்கு வந்த பாபிலோனிய மன்னான நஸ்ஸரின் படைகளும் முறையே யூதர்களை விரட்டியடித்து விட்டு அரபு மக்களை மீளக் குடியேறச் செய்கின்றன.

பின்னர் ஈரானிய ஆட்சி வியாபித்த போது யூதர்கள் மீண்டும் ஃபலஸ்தீனில் வந்து குடியேறினர்.

ஆனால் அவர்களது துரதிஷ்டம் அந்தப் புதுவாழ்வு சுமார் 300 அல்லது 400 வருடங்களுக்கு மேல் நிலைக்கவில்லை. அதற்குக் காரணமானோர் அவர்களே. அதாவது ஃபலஸ்தீனில் வந்து குடியமர்ந்த யூதர்கள் கி.பி.70 ல் ரோம சாம்ராஜ்யத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர். யூதர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மீண்டும் அங்கு வாழ்ந்த அரபியர் மீளமர்த்தப்பட்டனர்.

இஸ்லாமிய ஆட்சிக்குள்..!

பின்னர் பலஸ்தீனை ரோமர்களிடமிருந்து கலீபா உமர் (ரலி) அவர்கள் காலத்தில் மீட்டெடுக்கப்பட்ட போது ரோம பைஸாந்திய படையினர் ஜெரூஸலத்தின் திறவுகோளை உமர் (ரலி) அவர்களிடம் கையளித்த முறை வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் இடையிடையே கிறிஸ்தவ ஊடுருவல்கள் இடம் பெற்றன. சிலுவை யுத்தங்களும் நிகழ்ந்தன. முடிவில் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் ஃபலஸ்தீனை முழமையாக விடுவித்துக் கொண்டார்கள்.

இடைக்காலத்தில் பலரது இடையூறுகளுக்கு மத்தியில் இஸ்லாமிய வட்டத்தை தாண்டாத ஃபலஸ்தீன், துருக்கிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக கடைசி கலீபா சுல்தான் அப்துல் ஹமீத் கான் அவர்களின் ஆட்சியினுள் அமையப் பெற்றிருந்தது.

யூதர்களுக்கு முஸ்லிம்களிடையே அமைதி

இதே சம காலத்தில் யூதர்கள் தமக்கென ஒரு நாடு, தலைவன், சமூக அமைப்பு எதுவும் இல்லாமல் உலகெங்கும் சிதறி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கூட அவர்களால் அமைதியாக வாழ முடிந்தது முஸ்லிம்களின் ஆட்சிப் பகுதியில் மாத்திரமே. குறிப்பாக ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி இருந்த 800 வருட காலமம் அவர்கள் நிம்மதியாக வாழ்ந்தனர் என்பது அவர்களே ஒப்புக் கொண்ட விஷயம்.

யூதர்களுக்கு எதிராக கிறிஸ்தவக் கொடுமைகள்

இதே வேளை ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகளோ யூதர்களை பல கொடுமைகளுக்கு ஆளாக்கிய வரலாற்றைப் பார்க்க முடிகிறது. சுமார் 2000 ஆண்டுகள் வரை யூதர்கள் கிறிஸ்தவரின் கொடுமைகளுக்கு ஆளாகி வந்துள்ளனர். ஜெர்மனியில் 1933 1945 காலப் பகுதியில் ஹிட்லரின் கொடுமைகளுக்கு ஆளான யூதர்களுள் சுமார் 60 லட்சம் பேர் சித்திரவதை செய்யப்பட்டு இறந்துள்ளனர். இது மட்டுமல்ல உலகில் சிதறி வாழ்ந்த அவர்களுக்கு எம் நாட்டில் இடமளித்து வாழச் செய்வோம் என எந்த மேற்கத்திய நாடும் முன்வரவில்லை. இதற்கு யூதர்களின் இயற்கையான போக்கும் ஒரு காரணமே.

யூத நாடு பற்றிய சிந்தனை

சுவிட்சர்லாந்தில் 29-31ஃ8ஃ1897ல் கூடிய யூத அறிஞர்கள் மற்றும் தனவந்தர்கள் 204 பேர் தங்களுக்கு பலஸ்தீனில் ஒரு தாயகம் அமைய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

உலக யூத காங்கிரஸ் என அழைத்துக் கொண்ட அவர்கள் இத்திட்டத்தை ஐந்து வருடத்தில் நிறைவேற்றுதவதாக முடிவெடுத்தனர். எப்படியும் 50 வருடங்களை மீறாத இதன் கால எல்லை என்பது அவர்களது திடமான முடிவு.

இதைத் தொடர்ந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பணம் வேண்டும். அதற்காக யூதர்களின் தேசிய நிதி என்றொரு நிதியத்தை ஆரம்பித்தனர். வட்டி வழியின் மூலமும் உடனடிக் காசு கொடுப்பதன் மூலமும் நிலம் வாங்கவென நில வங்கி ஒன்றை ஆரம்பித்தனர். அதோடு தமக்கென ஹீப்று மொழியிலான தேசிய கீதமொன்றையும் உருவாக்கினர்.

இதைத் தொடாந்து உலக நாடுகளிலிருந்து பலஸ்தீன் நோக்கி யூதர்கள் வரலாயினர். அதன்படி 1917 ல் ஃபலஸ்தீனின் சனத்தொகை முஸ்லிம்கள் 567,000, யூதர்கள் 70,000 மற்றும் கிறிஸ்தவர்கள் 63,000 என்றாயிற்று. அதே வேளை உலக மகா யுத்தம் முடிவுற்று 1917ல் ஃபலஸ்தீன் பிரிட்டனின் கீழ் அமைந்த நாடாக மாறியதுடன் அவர்களது படையும் அங்கு வந்து குவிந்தது.

பிரிட்டனின் சதி

அப்பொழுது பிரிட்டனின் வெளிநாட்டுச் விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளராக இருந்த ஆதர் பெல்ஃபர் என்பவர் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அது 1917 நவம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்தப் பிரகடனத்தை வெளியிட பிரிட்டிஷ் அரசுக்குத் தொடர்ந்து தூண்டுதல் வழங்கவியவர் செயிம் வெய்ஸ்மேன் என்ற ரஷ்ய யூதராவார். இவர் யூத சியனிஸ அமைப்பின் 1948-1952 காலப் பிரிவின் தலைவராவார். இஸ்ரேல் உருவான பின ஜெரூஸலம் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் கடமையாற்றினார்.

இந்த பெல்ஃபர் பிரகடனத்தின் முக்கிய பகுதி

யூதர்களுக்கு பலஸ்தீனில் ஒரு தேசியத் தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு மிகவும் பரிவுடன் கவனிக்கிறது. இதனை ஏற்படுத்த எல்லா முயற்சிகளையும் இங்கிலாந்து மேற்கொள்ளும். அதேவேளை இப்போது அங்கே குடியிருக்கும் யூதர்களல்லாத மக்களுடைய பொதுவான உரிமைகளுக்கோ மத உரிமைகளுக்கோ பங்கம் வராது பார்த்துக் கொள்ளும்!.

இந்தப் பிரகடனம் பலஸ்தீனில் பிறந்து வாழ்ந்து வரும் முஸ்லிம்களை இரண்டாம் தர பிரஜை என்ற நிலைமைக்குத் தள்ளுகிறது. அத்துடன் இன்னும் ஆட்சியோ நாடோ சமூக அமைப்போ பெறாத யூதர்கள் முதல் நிலைக்குக் கொண்டு வரப்படுவதை அங்கீகரிக்கிறது.

இதைத் தொடர்ந்து பிரிட்டனின் எல்லா வகையான உதவி ஒத்தாசைகளுடனும் அவர்களது படைபலத்துடனும் யூதர்கள் பல நாடுகளிலிருந்து வந்து குடியேறலாயினர். ஆரம்பத்தில் அவர்கள் அமைதி காப்பவர்கள் போல் வந்தாலும் வெகு சீக்கித்தில் அவர்கள் பயங்கரவாதிகளாயினர். அவர்களுள் தோற்றுவிக்கப்பட்ட இரு பயங்கரவாத அமைப்புகளான இர்கம் ஹகானாத் என்பவை முஸ்லிம்களை கொலை செய்வதை தமது இலட்சியமாகக் கொண்டு செயற்பட்டன.

1948 ஜனவரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 400க் கும் அதிகமான கிராமங்கள் யூத சியோனிஸவாதிகள் வசமாயின. அவற்றில் வாழ்ந்த முஸ்லிம்களும் பெரும்பாலோர் கொலை செய்யப்பட்டதுடன் எஞ்சியவர்கள் அகதிகளாயினர்.

இத்தகைய கொடுமைகள் நிகழ்ந்து வரும் போது மறுபக்கம் யூத நாடு உருவாக்கப்படுவதற்கான அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் அரங்கேற்றப்பட்டன.

அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆதரவு

கி.பி.1922 ல் அமெரிக்கா அதன் இரு சபைகளிலும் யூதர்களுக்கான ஒரு நாடு ஃபலஸ்தீன் மண்ணில் அமைவதற்கு ஆதரவான கூட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றியது. அப்போது அமெரிக்கா பன்னாட்டுச் சபையில் அங்கத்துவ நாடாக இருக்கவில்லை. அந்தநிலையில் அந்த தீர்மானங்களை கி.பி.1924 ல் நடைபெற்ற ஆங்கிலோ அமெரிக்கா மாநாடு ஒன்றில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக் கொண்டது.

1939-5-17 ல் பிரிட்டனின் காலனித்துவ நாடுகள் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பதிகாரியான மெல்கம் மெக்டொனால்ட் என்பவர் சமர்ப்பித்த வெள்ளையறிக்கை ஒன்றில் இன்னும் 10 ஆண்டுகளுள் தமது நாடு யூதர்களையும் பலஸ்தீன அரபு மக்களையும் கொண்ட சுதந்திர பலஸ்தீன் நாடொன்றை அமைக்கும் ஆவல் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது உண்மையில் பலஸ்தீனைக் கூறு போடும் திட்டமாகும். முழுக்க முழுக்க பலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான ஃபலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான பலஸ்தீன் வந்தேறு குடிகளான யூதர்களுக்கும் பங்கு வைக்கும் நிலை இதன் மூலம் உருவாகிறது. இவ்வறிக்கை வெளியிடப்பட்ட போது பலஸ்தீனில் குடியேறியிருந்த வெளிநாட்டு யூதர்கள் எண்ணிக்கை 445,000 ஆகும்.

உண்மையில் பலஸ்தீன் துண்டாடப்படுவதில் ஆரம்பம் முதல் இறுதிவரை முழு மூச்சாக யூதர்கள் சார்பாக ஈடுபாடு கொண்ட நாடு பிரிட்டன் என்பதை எவரும் மறுக்க முடியாது. உலகின் பல நாடுகளில் பிரச்சினைகள் பல தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததும் பிரிட்டனே!

ஐ.நா.சபையின் போக்கு

ஐக்கிய நாடுகள் சபை அதன் பொதுச் சபையில் நிறைவேற்றிய எண் 181 தீர்மானத்திற்கொப்ப 1947 நவம்பர் 29 ம் நாள் ஃபலஸ்தீன பூமி அதன் பூர்வீகக் குடிகளான ஃபலஸ்தீனருக்கும் (45.53%) நிலம்இ எங்கோ இருந்து வந்த யூதர்களுக்கும் (56.47%நிலம்) இடையில் பிரித்துக் கொடுக்கப்படுவதை அங்கீகரித்தது. அத்துடன் ஜெரூஸலம் நகர் சர்வதேசமயமாய் அமைய வேண்டும் என்றும் அத்தீர்மானம் கூறிற்று.

இது ஐநா சபையின் அப்பட்டமான துரோகமாகும். அது அதன் அங்கத்துவ நாடுகள் மத்தியில் நியாயமாக நடக்க வேண்டியிருக்க ஃபலஸ்தீன் விவகாரத்தில் படுமோசமாக நடந்து கொண்டுள்ளது. காஷ்மீர் கிழக்கு திமோர் மற்றும் நாடுகளிலும் இஸ்ரேல் உருவான பின் இன்று வரையிலும் ஐ.நா. சபையின் போக்கு நியாயம் தவறிய வழியிலேயே அமைந்துள்ளது. இதனை முஸ்லிம்களின் நம்பிக்கைக்குரிய சபையெனக் கொள்வது விஷப் பாம்பை கழுத்தில் போட்டுக் கொண்டு உயிராபத்து வராது என நினைப்பதற்கு ஒப்பான செயலாகும்.

ஃபலஸ்தீனம் துண்டாகப்பட்டது

இவ்வாறு ஃபலஸ்தீனை துண்டாட கபட நாடகங்கள் அரங்கேறி வரும் வேளை, ஃபலஸ்தீனில் நிலைகொண்டு அக்கிரமம் புரிந்து வந்த பிரிட்டிஷ் படைகள் வாபஸ் பெற்றுச் செல்லும் காலம் நெருங்கி வந்தது. அவர்கள் செல்ல வேண்டிய காலம் 1948 ஜனவரி மாதமாகும். எனினும் சிற்சில காரணங்களைக் காட்டி அந்த கால எல்லையை பிற்போட்டு 1948-5-14 ல் செல்வதற்கு ஆயத்தமானது.

அதன்படி அந்தத் தினத்தில் பிரிட்டிஷ் படை வாபஸ் பெறப்பட்டது. அன்று வரை பிரிட்டிஷ் தூதுவராக ஃபலஸ்தீனில் கடமையாற்றிய சர். அலன் கன்னின்கம் என்பவரும் தன் தாய்நாடு திரும்பினார். அன்றிரவு 10 மணியளவில் யூத தேசிய சபை இரண்டும் இணைந்து இஸ்ரேல் என்றொரு நாடு உருவாக்கப்பட்டது என்பதை உலகுக்கு அறிவித்தன. அன்று அதன் ஜனாதிபதியாக ஸாயிம் வெய்ஸ்மேன்னும் பிரதமராக டேவிட் பென் குரியனும் தெரிவு செய்யப்பட்டனர்.

இப்படி பலஸ்தீன் துண்டாடப்படுவதை அன்று 56 நாடுகளின் நலன்களை கவனிக்கவென உருவாக்கப்பட்ட ஐ.நா. சபை 33 ஆதரவு வாக்குகளுடன் அங்கீகரித்து 13 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஒரு நாட்டை துண்டாட அங்கீகாரங்கள்

இஸ்ரேல் உருவாகி சில நிமிடங்களில் அதை அங்கீகரித்து ஆசிர்வதித்தார் அமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதி ட்ரூமென். அடுத்து அதை அங்கீகரித்த நாடு சோவியத் யூனியனாகும். அது 18-5-1948 ல் நடைபெற்றது. அதையடுத்து 25-01-1949ல் இஸ்ரேலிய தேர்தல் இடம் பெற்று ஓர் அரசு உருவானவுடன் அதே மாதம் 31 ல் அமெரிக்க அரசு அதற்கு முறையான அங்கீகாரம் வழங்கியது.

இஸ்ரேலிய நாடாளுமன்றத்திற்கு நெஸ்ஸட் எனப் பெயரிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான சர்வதேச பொருளாதார மற்றும் அமைப்புக்களில் ஐ.நா. சபை, அமெரிக்கா பிரிட்டன் ஆகியவ்றின் சிபாரிசுடன் அங்கத்துவம் வழங்கப்பட்டது. அடுத்து 10 ஆண்டுகளுக்குள் 63 நாடுகள் அதற்கு அங்கீகாரம் வழங்கின.

இன்று இஸ்ரேல் உலகின் பலம் வாய்ந்த நாடொன்றாக பரிணமித்துள்ளது. அந்த நிலைக்கு அதைக் கொண்டு வருவதில் அமெரிக்க அரசு அதிக சிரத்தை எடுத்துக் கொண்டது. உள்ளூர அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கில் தனது நிலையான ஆதிக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் பிரதான காரணியாகும்.

யூத சியனிசத்தின் இலட்சியங்கள்

இஸ்ரேலின் யூத சியோனிஸத்தின் ஆதிக்க வெறிப்பாதையில் அது அடைய விரும்பும் இன்னும் பல அம்சங்கள் உள்ளன. அவற்றை இப்படி வகுத்து நோக்கலாம்.

பரந்து விரிந்த யூத ராஜ்ஜியமொன்றை நிறுவுவது அதன் எல்லைக்குள் தற்போது தன்னுள் வைத்துக் கொண்டுள்ள காஸா, கோலான் குன்றுப் பகுதிகளுடன் சஊதி அரேபியாவின் மதீனா உள்பட பெரும் பகுதி, ஈராக்கின் 90% பகுதி, குவைத், சிரியா, துருக்கியின் ஒரு பகுதி, ஜோர்டான், லெபனான், சினாய் பாலைவனம், எகிப்தின் ஒரு பகுதி என்பனவும் அடங்கும்.

மஸ்ஜிதுல் அக்ஸாவை தரைமட்டமாக்கி விட்டு அந்த இடத்தில் அவர்கள் கனவு காணும் ஐஹக்கல் சுலைமானியை நிர்மாணிப்பது.

ஜெருஸலம் இஸ்ரேலின் தலைநகராக்குவது

இவற்றை அடைவதுடன் இறுதியாக அவர்கள் அடைய விரும்பும் இலக்கு இந்த உலகை அவர்களின் பிடிக்குள் கொண்டு வருவதாகும். அதன் மூலம் பொருளாதார நோக்கத்தை நிறைவு செய்வதாகும்.

உலக யூத அமைப்பின் தலைவர் நெக்ஹும் கோல்ட்மேன் என்பவர் கனடாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் அதை இப்படி விவரிக்கிறார்.

யூதரின் இறுதி இலக்கு!

யூதர்கள் தவ்ராத் வேதத்திலும் தமது மதத்தினதும் உயர்வு கருதி ஃபலஸ்தீனை தமது நாடாக்கிக் கொள்ள நினைக்கவில்லை. அதன் கடற்பரப்பிலிருந்து பெறப்படும் கனிப் பொருட்கள் மூலம் வருடம் ஒன்றுக்குக் கிடைக்கும் மூன்று பில்லியன் டாலர்களுக்காகவோ அமெரிக்காவை விடவும் 20 மடங்கு அதிகமான எண்ணெய் சேமிப்பைக் கருத்திற் கொண்டோ ஃபலஸ்தீனைப் பெற்றுக் கொள்ள நாடவில்லை. மாறாக ஃபலஸ்தீன் ஐரோப்பா ஆசியா ஆப்ரிக்கா ஆகிய பரந்த பூமிகளுக்கிடையிலான போக்குவரத்துப் பாதையில் அமைந்திருப்பதும் எல்லா வகையான உலக சக்திகளுக்கிடையில் மத்தியத்தளமாகக அமைந்திருப்பதும் பணப் புழக்கத்தின் கேந்திர ஸ்தானமாக அமைந்திருப்பதும் தான் பலஸ்தீனை நமது நாடாக ஆக்கிக் கொண்டத்ன நோக்கம் ஆகும்.

இஸ்லாமியப் போராட்டம்

உண்மையில் யூத சியனிஸவாதிகள் இன்று செய்து வருவதும் இனி செய்யப் போவதும் இந்த இலக்கை அடைந்து கொள்வதற்கான கொடுஞ் செயலாகும். இடையிடையே ஒஸ்லோ ஒப்பந்தம் என்றும் கேம்ப் டேவிட் என்று வரும் ஒப்பந்தங்களும் மற்றும் சமாதான ஏற்பாடுகளும் அவர்கள் தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் தொடர்ந்து உலகுக்குத் தொல்லை தரவும் உதவுமே தவிர வேறு எந்த முன்னேற்றமும் நியாயத்தின் அடிப்படையில் வரவே வராது.இந்நிலையில் இன்று இஸ்லாமிய அமைப்புக்கள் முன்னெடுத்துச் செல்லும் சத்திய வழியிலான போராட்டத்தைத் தவிர ஃபலஸ்தீனை மீட்டெடுக்க வேறு வழியில்லை.

– நன்றி; ஜாக்.காம்

2 Comments to “ஃபாலஸ்தீன வரலாறு”

  1. Ly2ptV mvhqiysvtgmo, [url=http://mfgzpwltlltt.com/]mfgzpwltlltt[/url], [link=http://okcuzkqmdben.com/]okcuzkqmdben[/link], http://zaupwqcojhyc.com/

  2. I’m shekcod that I found this info so easily.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news