பாபர் மசூதி வழக்கின் முக்கிய மனுதாரரான ஹாஷிம் அன்சாரி மரணம்

பாபர் மசூதி வழக்கின் முக்கிய மனுதாரரான ஹாஷிம் அன்சாரி மரணம்

பாபர் மசூதி வழக்கின் முக்கிய மனுதாரரான ஹாஷிம் அன்சாரி தனது 95-வது வயதில் இன்று காலமானார்.

அயோத்தியில் ராமர் கோவில் உள்ள, நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு 60 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பாபர் மசூதி இடிப்புக்கு பின் அங்குள்ள நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பாக 1949-ம் ஆண்டில் இருந்து நீடித்துவந்த சர்ச்சையில் ஹாஷிம் அன்சாரியின் பெயரும் இணைந்தே இடம்பெற்று வந்தது.

1961-ம் ஆண்டு மத்திய வக்பு வாரியம் சார்பில் பைஸாபாத் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் ஹாஷிம் அன்சாரியுடன் சேர்த்து மொத்தம் ஏழுபேர் மனுதாரர்களாக இடம் பெற்றிருந்தனர். கடந்த 2010-ம் ஆண்டு இவ்வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது.

ஒருபகுதி நிலம் அக்ஷரா பரிஷத்துக்கும், மற்றொருபகுதி நிலம் ராமர் கோவில் கட்டுமான கமிட்டிக்கும், மீதமுள்ள பகுதி முஸ்லிம் அமைப்புக்கும் சொந்தம் என அந்த தீர்ப்பு கூறியது.

எனினும், இந்த தீர்ப்பால் அக்ஷரா பரிஷத் தலைவர் துறவி ஞானதாசும், முஸ்லிம்களும் திருப்தியடையவில்லை. கோர்ட்டுக்கு வெளியே இந்த பிரச்னைக்கு சுமுக தீர்வு காண அயோத்தி முஸ்லிம் அமைப்பின் தலைவரான ஹாஷிம் அன்சாரியும் ஞானதாசும் முயற்சி செய்தனர்.

இந்த முயற்சி பலன் அளிக்காததால் அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஹாஷிம் அன்சாரி, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2010-ம் ஆண்டு மேல்முறையீடு செய்தார். பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் மனுதாரராக உயிருடன் வாழ்ந்துவந்த ஒரேநபர் ஹாஷிம் அன்சாரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கின் மூல மனுதாரரான ஹாஷிம் அன்சாரி இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 95.

முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்காலின் மறைவுக்கு அசோக் சிங்கால் மறைவுக்கு ஹாஷிம் அன்சாரி இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.

‘பாபர் மசூதி வழக்கில் எங்களை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்திவந்த போராளி அசோக் சிங்காலின் மறைவை அறிந்து மிகவும் துயரமுற்றேன். தனிமனிதராக அயோத்தியா இயக்கத்தை அவர் ஆரம்பித்தார். அதில் ஏராளமான இந்துமக்களை இடம்பெற செய்தார்.

ஆரம்பத்தில் பா.ஜ.க.வுக்கு இரண்டு எம்.பி.க்கள் மட்டுமே இருந்த நிலையில் அவர் ஆரம்பித்த ராமஜென்ம பூமி இயக்கத்தின் பிறகு இன்று பா.ஜ.க. எம்.பி.க்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை நாம் கண்கூடாக அறிய முடிகின்றது. அவரது மறைவு ராமஜென்மபூமி இயக்கத்துக்கு பேரிழப்பாகும்’ என ஹாஷிம் அன்சாரி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news