மறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.

மறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு,

நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் இழந்ததை விட சிறந்ததையும் வழங்குவானாக.
imam
நமது ஜமாஅத்தின் சார்பாக நானும் மாநில பொருளாளர் நூர்முஹம்மது அவர்களும், தலைமை நிலைய செயலாளர் ஜாஹிர் ஹூஸைன், மாநில துணை பொதுச்செயலாளர் முஹைதீன் பக்ரி மற்றும் சென்னை, நாகை, மதுரை, கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டோம். அல்லாஹ்வுடைய பெருங்கிருபையால் அங்கு வந்திருந்த சில சகோதர்களுடன் நாமும் அங்கேயே அமர்ந்து அவரவர்களாலான சில ஒத்துழைப்புகளை தந்து அந்த குடும்பத்திற்காக குறிப்பாக அவருடைய மனைவி இத்தா இருக்கக்கூடிய கால கட்டத்தில் அவர்களின் குடும்ப செலவிற்காக ஒரு சிறு தொகை வழங்கப்பட்டது.

imam1imam2
அவருக்கு ஏழு வயதிலும் ஐந்து வயதிலும் இரண்டு குழந்தைகள், தந்தை தங்களை விட்டு பிரிந்ததை கூட அறியாமல் புன்னகையோடு காட்சி தந்த முகங்கள் இன்னமும் நமது கண்களில் நீங்காமல் இடம் பெற்று கொண்டிருக்கிறது. அந்த கவலையின் ஈரம் காய்வதற்குமுன் நாம் அந்த குடும்பத்திற்காக ஏதேனும் செய்தாகவேண்டும் ஆதலால் அன்புள்ள சகோதர சகோதரிகள் தாராளமாக இந்த வார ஜூம்ஆவில் அவரது குடும்ப நலனுக்காக வேண்டி பெறப்பட உள்ள பொருளாதார உதவிகளை அள்ளி வழங்கி, அன்னாரது குடும்பத்தில் ஒரு சிறிய ஆறுதலை வழங்குவதற்கு அனைவரும் இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்ய கடமைபட்டிருக்கிறோம்.

மேலும் அவர்களின் குடும்பத்தைப்பற்றி குறிப்பிடவேண்டிய முக்கியமான விஷயம் அவரது பராமரிப்பில்தான் விதவையான அவரது சகோதரியின் குடும்பமும் இருந்து வந்துள்ளது. அதைப்போன்று அவரின் மனைவியின் உடன்பிறந்தவர்களும் நோய்வாய்பட்ட நிலையில் இவருடைய பொருளாதாரத்தை வைத்துதான் அவர்களுடைய செலவினங்களும் நடந்து கொண்டிருந்தது.

ஆதலால் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தாராளமாக உதவிடுமாறு கேட்டு கொள்கிறோம். குறிப்பாக வெளி நாட்டு வாழ் சகோதரர்கள் இதிலே கொஞ்சம் கூடுதலாக கவனம் எடுத்து ஏழ்மையான குடும்பத்திலிருக்கும் அவர்களது நிலை சீராவதற்கும், ஒரளவிற்கு நிலையான பொருளாதாரம் பெறுவதற்கும் தாராளமாக அள்ளி தந்து அல்லாஹ்வுடைய அருளை பெறும்படி அன்போடு கேட்டு கொள்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலா அழைப்பு பணியில் இருக்கிற யாவருக்கும், அழைப்பு பணியிலே ஆர்வத்தோடு ஒத்துழைக்கிற அனைவருக்கும் அருள் புரிவானாக என இந்த சந்தர்ப்பத்தில் துஆ செய்கிறோம். மேலும் அவர்களது ஜனாஸாவை பிரேத பரிசோதனை முடித்து எடுத்து வரும் சேவையில் முக்கிய பங்காற்றிய தமுமுக சகோதரர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.( இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் சகோ ஹாஜி அலி மகன்கள்)

ஜஸாகுமுல்லாஹு கைரன்.

இவண்,
அன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி
மாநில பொதுச்செயலாளர்
JAQH தமிழ்நாடு.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news