மறுபடியும் டெஸ்ட் போட்டிகளில் ஆட வருவேன்.. கெய்ல் நம்பிக்கை

மறுபடியும் டெஸ்ட் போட்டிகளில் ஆட வருவேன்.. கெய்ல் நம்பிக்கை
நான் மீண்டும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் டெஸ்ட் அணியில் இடம் பெறுவேன் என்று அதிரடிப் புயல் கிறிஸ் கெய்ல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல். ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் புயல் போல ஆடக் கூடியவர். இவரது அதிரடி ஆட்டத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் பெருவாரியாக உண்டு.
குறிப்பாக டி20 போட்டிகளில் இவர் தான் கிங். நின்ற இடத்திலிருந்தே செஞ்சுரி போடக் கூடிய அசகாய சூரர். ஆனால் இவருக்கும் இவரது கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். இதனால் மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் இவருக்கு அடிக்கடி இடம் கிடைக்காமல் போய் விடுகிறது.
தற்போது கிறிஸ் கெய்ல் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார். 36 வயதான கெய்ல், கடந்த 2014ம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. அதேபோல கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஒரு நாள் போட்டியிலும் அவர் ஆடவில்லை.

ஐபிஎல் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் மட்டுமே தற்போது இவர் ஆடி வருகிறார். குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் இவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதேபோல பிற நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளிலும் கெய்ல் ஆடி வருகிறார்.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news