பெட்ரோல், டீசல், விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

பெட்ரோல், டீசல், விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 37 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு  2 ரூபாய் 78 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு 1.9.2016 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
சர்வதேச சந்தையில்  கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் முழுபயனையும் மக்களுக்கு அளிக்காத மத்திய அரசு தற்போது கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
ஏற்கெனவே விலைவாசி உயர்வு மக்களை துன்புறுத்திவரும் நிலையில் இந்த விலை உயர்வு மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் அபாயம் உள்ளது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின்  வாழ்க்கைத் தரம் பெரிதும் பாதிக்கப்படும்.
எனவே மத்திய அரசு விலை உயர்வை திரும்பப் பெறுவதுடன், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள விலை நிர்ணய உரிமையையும் திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கின்றது.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news