காகமும் கார்த்தியும் | நேரம் தவறாமை
சுடரொளி ஒரு பள்ளி பருவ மாணவன் ஒரு நாள் கா… கா…. என்று கத்திக்கொண்டு ஒருக் காகம் பறந்து வந்தது அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது.
சுடரொளி அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசை, பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது. சுடரொளி திரும்பி வந்து காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் அங்கு வந்து அங்கும் இங்கும் நடந்தது. சுடரொளி தான் தின்று கொண்டிருந்த வடையைப் பிய்த்துக் காகத்துகுப் போட்டான்.
காகம் வேகமாக ஓடி வந்தது. வடையைக் கொத்திக் கொண்டு பறந்தோடியது. சுடரொளிக்கு அந்தக் காகத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வெகுநேரம் காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் வரவேயில்லை.
மூன்றாம் நாளும் அந்தக் காகம் அந்த இடத்துக்கு, அதே நேரத்துக்கு வந்தது. இன்று அச்சப்படாமல் காகம் சுடரொளியின் அருகில் வந்தது. சுடரொளியின் கையை ஆவலோடு பார்த்தது. சுடரொளி வீட்டிற்குள் சென்று அரிசியை எடுத்து வந்து போட்டான். காகம் பொறுமையாக ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கித் தின்றது. சுடரொளி காகத்தைப் பிடிக்க எழுந்தான். காகம் பறந்தோடியது.
ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது. சுடரொளியும் காகமும் நண்பர்களானார்கள். சுடரொளி சொல்லுவதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும்.
சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சுடரொளி வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை, பேசத் தெரியாத, எழுதத் தெரியாத,ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது. சுடரொளி வியந்தான்.தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான்.சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சுடரொளியை அனைவரும் பாராட்டினார்கள்.
Leave a comment