செப்பித்திரிவாரடி….

செப்பித்திரிவாரடி….

images_1482249486361

 

 

 

 

 

சித்தன் படும் பாடு எல்லாம்
ஞானம் வந்தால்
அமைதி பெறும்..
பித்தனுக்கும்
உறக்கம் வந்தால்
கண்ணயர்வான்
ஞானப்பெண்ணே!!

ஊரெல்லாம்
அலையுறேண்டி.
ஓரிடமும்
காசு இல்ல
ஞானப்பெண்ணே!!

மைக் வச்சு
பேச வச்சோம்..
மை தடவ
விரலும் தந்தோம்..
மடியில
கை வச்சானடி…
ஞானப்பெண்ணே!!
அடிவயிற்றில்
சுட்டானடி…

ஒளிருது பார்
தேசமென்றார்.
மிளிருது பார்
நகரமென்றார்..
குளிருக்குள் நின்றோமடி..
ஞானப்பெண்ணே!
கூத்தாடி
பொழப்பாச்சுடி…

ஊரெல்லாம்
சுத்தப் பேச்சு
உலகமெல்லாம்
சுத்தியாச்சு..
சோத்துப்பானை
சுத்தமாச்சு..
ஞானப்பெண்ணே!!
தோத்துப்போய்
நின்னோமடி..

கருப்பெல்லாம்
ஒழியுமென்றார்…
கவர்மெண்ட்
திட்டமென்றார்..
சுருக்குப்பை
கானோமடி
ஞானப்பெண்ணே!!!
சுரணையற்றுப்
போனோமடி…

ஓட்டுக்கேட்டு
வந்து நிற்பார்..
சேட்டுக்கடை
இனிப்பாட்டம்
சிரிச்சுக்கிட்டே
பேசி நிற்பார்..
மனசுக்குள்ளே
போட்டு வைய்யடி
ஞானப்பெண்ணே!!!
வேட்டு வைக்க
வேணுமடி.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news