வார்தா புயல் வீழ்த்திய மரங்களை நடும் சென்னை இளைஞர்கள்

வார்தா புயல் வீழ்த்திய மரங்களை நடும் சென்னை இளைஞர்கள்

img_20161225_110516727

முல்லைவனம் ‘Green Kalam Movement ‘ என்னும் அமைப்பில் நடிகர் விவேக் உடன் இணைந்து செயற்படுகிறார். மரங்களை நடுவது மற்றும் கேட்போருக்கு வழங்குவது இந்த அமைப்பின் பணி. ‘ Tree Bank of India ‘ என்னும் அமைப்பை அவர் தமது அமைப்பாக நடத்தி வருபவர். இருப்பது ஆண்டுக்கும் மேல் இதில் அவர் பல லட்சம் மரங்களை நட்டு சாதனை புரிந்தவர். 2012 முதல் தொடர்ந்து நான் மாதா மாதம் பத்து மரக்கன்றுகளை அவர் அமைப்புக்கு வழங்கி வருகிறேன். இன்று தான் முதல் முறை மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள இடுகாட்டில் மரக்கன்றுகளை நடும் இளைஞர்களுடன் சேர்ந்து சில கன்றுகளை நடும் வாய்ப்பு கிடைத்தது.

மேலே உள்ள புகைப்படத்தில் வலது பக்கம் பச்சை நிற சட்டை அணிந்திருப்பவர் முல்லைவனம். இன்று மரம் நடுவதில் கவனிக்க வேண்டியதை அவர் வழி நேரில் அறிந்தேன்.

இடுகாட்டில் பணி புரியும் இளைஞர்கள் மற்றும் மற்றும் மூன்று தன்னார்வ மாணவர்கள் , இவர்களுடன்  அங்கே ஈமக்கிரியை புரிய வந்த ஒரு குடும்பத்தினர் மரம் நடும் புகைப்படங்கள் கீழே . விழுந்து இன்னும் அகற்றப்படாத மரங்களும் புகைப்படங்களில் இருக்கின்றன. இளைஞர்கள்   பசுமையில் காட்டும் ஆர்வம் மிகவும் ஊக்கமளிப்பது.

img-20161225-wa0010       img-20161225-wa0004       img-20161225-wa0002       img_20161225_110700998

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news