பிடல் காஸ்ட்ரோ பற்றி இதுவரை அறிந்திராத சுவையான சில தகவல்கள்

பிடல் காஸ்ட்ரோ பற்றி இதுவரை அறிந்திராத சுவையான சில தகவல்கள்
உலகப் புகழ் பெற்ற புரட்சியாளரும் கியூபா நாட்டின் தந்தை என அறியப்பட்டவர் பிடல் காஸ்ட்ரோ. அவரைப் பற்றி சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.
1.ஐநா சபையில் மிக நீண்ட உரை நிகழ்த்தி சாதனை படைத்திருக்கின்றார். செப்டம்பர் 26, 1960-யில் அவர் நிகழ்த்திய உரையின் நீளம் 4 மணிநேரம் 26 நிமிடங்கள் ஆகும்.
2.பிடல் காஸ்ட்ரோவின் பிறந்த தினம் அமெரிக்கர்கள் அஞ்சும் 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆகும்.

3.1940-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டுக்கு 12 வயது சிறுவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அக் கடிதத்தில் 10 டாலர் நாட்டிடை தான் இதுவரை பார்த்ததே இல்லை, ஒன்றை அனுப்பிவைக்குமாறு அச் சிறுவன் கேட்டிருந்தான். அந்த சிறுவன் வேறு யாருமில்லை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவே தான்.

4.பிடல் காஸ்ட்ரோவின் தனி அடையாளமே அவரடைய தாடி தான். அந்த தாடியை நிரந்தரமாக வளரவிடாமல் தடுக்க அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ முடிவளர்ச்சியை தடுக்கும் கெமிக்கலை பயன்படுத்த ஒரு தனித்த திடடமே தீட்டியிருந்தது. சவரம் செய்யாமல் இருப்பதால் ஆண்டுக்கு 10 நாடுகளை தான் மிச்சப்படுத்துவதாக பிடல் காஸ்ட்ரோ பல முறை பேசியிருக்கின்றார்.

5.தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலாவும், பிடல் காஸ்ட்ரோவும் இணைந்து How far we slaves have come என்றொரு புத்தகம் கூட எழுதி வெளியிட்டுள்ளனர்.

6.தனி நபர் வழிபாட்டை ஊக்குவிக்க கூடாது என்பதால், கியூபாவில் எந்தவொரு தெரு, இடம், கட்டிடம், நிறுவனத்துக்கும் தனது பெயரை வைக்கக் கூடாது எனவும், தான் இறந்த பின் தனது சிலையைக் கூட நிறுவக்கூடாது என அறிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news