உலகை ஆளக் காத்திருக்கும் தமிழர்கள்

உலகை ஆளக் காத்திருக்கும் தமிழர்கள்

kumarikandam113

நாளைய தினமே மூன்றாம் உலகப்போர் ஏற்படப்போகும் என்ற நிலை ஏற்பட்டதோடு, சர்வதேசமே அதனை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்கின்றது.போர் அறைகூவல்கள் பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் விடுக்கப்பட உலகப்போருக்கான சாத்தியம் வலுப்பெற்று, உலக அழிவையும் காட்டிவிடும் ஒரு வகை பீதி கண் முன் நகர்கின்றது.அதேபோல் இந்த உலக யுத்தத்தை பற்றி பல தீர்க்க தரிசனங்கள் கூறப்பட்டுள்ளதால் உலகம் ஒரு வித பதற்றத்திலேயே நாட்களைக் கடத்துகின்றது.இது இவ்வாறு இருக்க, நவீன உலகின் நடைமுறைப் பாதை மறைவாகக் கொடுக்கும் ஓர் செய்தி என்ன வெனின் தமிழர் மீண்டும் உலகை ஆளப்போகின்றார்கள் என்பதே.அழிக்கப்பட்டு, அடக்கப்பட்டு தொடர்ச்சியாக அடிமைப்படுத்த பலராலும் திட்டமிட்டு வரும் ஓர் இனம் எப்படி மீண்டும் உலகை ஆளும் என்பது இப்போதைக்கு வேடிக்கையான விடயமாக இருக்கலாம்.ஆனால் இதற்கான நம்பிக்கையைக் கொடுத்து வருகின்றது தமிழரின் எழுச்சி. தமிழர் ஒரு காலத்தில் இந்த உலகை ஆண்டனர் என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்று.இருப்பாய் தமிழா நெருப்பாய்! குட்டக் குட்ட நீ குனிந்தால்குட்டிக் கொண்டேயிருக்கும் இவ்வுலகம் …..என அறிந்ததாலோ என்னவோ இப்போது மீண்டும் ஒன்றுபட்டு விட்டான்.இந்த வரிகளை சாத்தியப் படுத்துகின்றது இன்றைய தமிழரின் ஒன்று கூடல்.சரி அது எப்படி முழு உலகையும் தமிழன் மீண்டும் ஆளுவான் என்று கூறமுடியும். எப்படி சாத்தியம்? என்ற கேள்வியோ? அல்லது சந்தேகமோ வேண்டாம். இதற்கு காரணம் இருக்கின்றது.அதாவது, இப்போதைக்கு வடகொரியாதான் அமெரிக்காவிற்கு எதிரி என்பது வெளிப்படையாக தெரிந்த விடயம். ஆனால் ஒட்டு மொத்த உலகிற்குமே தமிழர்கள் பிரதான எதிரிகள்.சட்டென்று மேலோட்டமாக தெரியாத விடயம் இது. இலங்கை யுத்தத்தை சற்று நிலை நிறுத்திப் பாருங்கள். தமிழர்கள் என்ற காரணத்திற்காக சர்வதேசம் இணைந்து அழித்தொழித்தது. இன்றுவரை அதற்கான தீர்வுகளை கிடைக்காதது வேறு விடயம். ஆனால் உலகில் வேறு எந்த இனத்தையும் சர்வதேசமே திட்டமிட்டு சேர்ந்து அழித்தது இல்லை என்பதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.அதேபோல் குமரிக்கண்டம் முதல், சிந்துவெளிச் சமூக காலம் வரை பல வகையான தமிழர்களின் உண்மையான வரலாறுகள் இதுவரையில் பெரிதாக வெளிப்படுத்தப்படவில்லை.சிந்துவெளி தொல்பொருள் ஆய்வு கூட தொடர்வதற்கு இப்போது கடும் எதிர்ப்பு உள்ளது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. அதற்கும் மேல் தமிழர் வரலாறு கூறும் பல நூல்கள் தடை செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் பல நடந்துள்ளன.அதேபோல் அண்டைநாடு இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. சற்று சிந்தித்துப் பாருங்கள் இந்தியாவும் உண்மையான தமிழர் வரலாற்றை பாட ரீதியாகவும் புகட்டுவது இல்லை. தமிழரின் பல உண்மைகள் சாதனைகள் புதைக்கப்பட்டே போயின தமிழர் வரலாற்றில்.அவ்வளவு ஏன் யாழ். நூலகம் எரிக்கப்பட்டதற்கு காரணம் இனக்கலவரம் என்பது சோற்றுக்குள் முழுப் பூசனிப் பொய்.தமிழர்களின் உண்மையான வரலாறு அழிக்கப்பட வேண்டும் என்ற ஓர் இலக்குக்காகவே யாழ். நூலகமும் எரிக்கப்பட்டது.இவ்வாறான பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழர்கள் விடயம் அந்த அளவு ஆழமானது.இவ்வாறு தொடர்ச்சியாகவும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழர்களை அடக்க வேண்டும் என்ற செயற்பாடுகள் நடந்து கொண்டு வருவது அவதானிக்க கூடிய ஒன்று. ஆனாலும் அவற்றினை நாம் எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை.தமிழர்களிடையே இப்படியான தொடர் பயணத்தில், போராட்ட களமே வாழ்வாகிப்போன தமிழர்களின் நிலை இன்று வேறுபக்கம் திரும்பி விட்டது. அதாவது ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற ஓர் புதுப்பயணத்தில் கால் பதித்து உள்ளான்.இதில் உச்சகட்ட வியப்பு யாதெனில் வல்லரசுகளுக்கு எல்லாம் வல்லரசான அமெரிக்காவிற்கு எதிராக தமிழன் போர்கொடிகளைத் தூக்கிவிட்ட நிலை ஏற்பட்டு விட்டது.அமெரிக்காவின் அதிபர் மாறிப்போவார் புது அதிபர் பதவி ஏற்பார் என்பது 500 வருடங்களுக்கு முன்னர் கணிக்கப்பட்ட விடயம். இது நம்ப முடியாத உண்மை இதனை சொன்னது நோஸ்ராடாமஸ் எனும் தீர்க்கதரிசி.இது மட்டுமல்ல ஆனால் ஆச்சரியம் மிக்க அவருடைய ஓர் கணிப்பே ட்ரம்ப் பதவி ஏற்றதன் பின்னர் உலகை ஆண்ட ஓர் இனம் மீண்டும் உலகை ஆளத் தொடங்கும் என்பது.யாரோ எதுவோ சொன்னார்கள் என எடுத்துக் கொள்ள முடியாது என நினைக்க வேண்டாம். இன்றைய நிலையில் இவருடைய தீர்க்க தரிசனங்களால் கதி கலங்கிப் போய் உள்ளது ஒட்டு மொத்த உலக நாடுகளுமே.இவர் சொன்ன பல தீர்க்கங்கள் அப்படியே அச்சு பிசகாமல் நிறைவேறி வருகின்ற ஓர் காரணத்தினால் சற்று ஆழச் சிந்திப்பு தேவை இவ்விடயத்தில்.அவர் கூறியதன் படியே இப்போது உலகப்போர் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றது என்பது கண் முன்னே தெரிந்து கொண்டு வருகின்றது.மூன்றாம் உலகப்போரை துவக்கி வைப்பதற்கு காரணமாக இருப்பது டிரம்ப் என்பது நோஸ்ராடாமஸ் கணிப்பு. அது இப்போது தெளிவாகவே தெரிகின்றது.அதுவும் அணுகுண்டு போரை டிரம்ப் ஆரம்பித்து வைப்பார் என்றும் தெரிவித்துள்ளார் தீர்க்கதரிசி. அதுவும் கூட சாத்தியமான விடயமாகவே இருக்கின்றது.இந்த நிலையிலேயே அதே நொஸ்ராடாமஸின் இன்னோர் கணிப்பில்…,“உலகை ஆண்ட இனம் ஒன்று மீண்டும் உலகை ஆழ நினைக்கும், அதனால், உலக யுத்தம் மூழும் ஆனாலும் இனம் மீண்டும் ஆளும், அதற்கு அவர்களின் முன்னோர்கள் ஆவிகள் மனதளவில் தைரிய மூட்டும் தூண்டுதலாக இருக்கும்” என்ற பொருளில் குறிப்பிட்டுள்ளார்.இந்த வாக்கியங்கள் பெரும்பாலும் பிரித்தானியா நாட்டிற்கே பொருந்தும் என பல ஆய்வாளர்கள் கூறினாலும் சிந்தித்துப் பாருங்கள்.உலகின் அனைத்து இடங்களையும் தமிழர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். இது மிகைப்படுத்தப்பட்டது அல்ல வரலாறு நிரூபித்த உண்மை.அதேபோல் கடந்த சில காலங்களாக தமிழர் மத்தியில் உணர்வு பூர்வமான பல செயல்கள் இடம்பெறுவதை காணமுடிகிறது. அவர்களின் ஆளும் ஆற்றல் ஒரு கட்டத்தில் பின்னடைவை சந்தித்து தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.உதாரணமாக ட்ரம்ப் பதவி ஏற்ற அதே சமயம் முழு உலகத்தையும் உழுக்கும் வகையில் தமிழர்கள் ஒன்று சேர கிளர்ந்து எழுந்தார்கள். அதுவே முழு உலக அளவிலும் சாதனை படைத்து, அதிர்வை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு போராட்டம். சாதாரண ஜல்லிக்கட்டு என்று எவராலும் இதனை ஒதுக்கித் தள்ளி விட முடியாது. தன் இனத்திற்கு அநியாயம் நடக்கின்றது என்பதனை அறிந்து கொண்ட தமிழன் கடல் என ஒன்று திரண்டான். தமிழர்களின் இந்த எழுச்சி பல தரப்பட்ட முரண்பட்ட விடயமாக மாறியதையும், சர்வதேசமே விழிப்படைந்து அதிர்ச்சியடைந்ததையும் நாம் நேரடியாகப் பார்த்தோம். ஏன் இவ்வாறு ஒட்டு மொத்த உலகும் பதற்றமடைய வேண்டும். இந்த போராட்டம் நிச்சயமாக தமிழர்களின் ஒன்று கூடலையும், எழுச்சியையும் நேரடியாக சர்வதேசத்திற்கே உணரவைத்தது. இதில் குறிப்பாக நோஸ்ராடாமஸ் கூறியது “ஆண்ட இனம்…” என்பதே அதாவது அவருடைய காலத்திற்கு முதல் ஆண்ட இனம். என்பதே பொருள். அப்படி பார்க்கும் போது, அவருடைய காலத்திற்கு முன்னர் குமரிக் கண்டம் தொடக்கம் ஒட்டுமொத்த உலகையும் ஆண்ட ஒரே இனம் தமிழரே. அந்த இனத்தையே அவர் குறிப்பிட்டுள்ளாரா? ட்ரம்ப் பதவி ஏற்கும் அதே சமயம் மெரினாவில் எழுந்த தமிழர்களின் அலை முழு உலகிலும் எதிரொலித்தது. இந்த எழுச்சி இன்றும் அடக்கப்பட வில்லை. இந்த ஜல்லிக் கட்டு போராட்டம் அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு எதிரானதாகிப் போனது. ஆம் தமிழ் நாட்டில் காப்ரேட் எனும் மாயவலைக்கு எதிரானதாகிப் போனது. அமெரிக்கா உற்பத்திப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது இது அமெரிக்காவிற்கு வீழ்ந்த ஓர் மிகப்பெரிய பொருளாதார அடி என்பதனை மறுக்க முடியாது. இதற்கு கிடைத்த பதில் அமெரிக்காவிற்கு எதிரியாக தமிழ்நாடும் தமிழர்களும் மாறி விட்டார்கள். என்பதனையே காட்டுகின்றது. அமெரிக்கா உட்பட ஆங்கிலேய நாடுகளிலேயே தமிழர்கள் போராட்டம் செய்யும் அளவு ஓர் அடங்காத் திமிருடன் இப்போது பயணித்துக் கொண்டு வருகின்றான் என்பது அறிந்த விடயம். இது ஒரு புறம் இருக்கட்டும். இப்போது உலக யுத்த விளையாட்டு ஆரம்பமாகி விட்டது அதற்கு திட்டமிட்டுள்ளது இஸ்ரவேல் எனும் நாடு குட்டி நாடு. இது நம்ப முடியாத உண்மை இது. ஓர்உலக கோட்பாடு எனும் செயற்பாடு அரங்கேற்றப்பட்டு கொண்டு வருகின்றது. சிரியா ஒரு பக்கம், கூச்சலிடும் வடகொரியா மறுபக்கம், அனைவரையும் அடக்க அமைதியாக அதே சமயம் சதுரங்க காய் நகர்த்தும் அமெரிக்கா ஒரு பக்கம். பலத்திற்காக காத்திருக்கும் ரஷ்யாவும், சீனாவும் தனிப்பக்கம். இடையே அமெரிக்காவை பழிவாங்க காத்திருக்கும் யப்பான். இப்படி பல நாடுகள் எதிரிகளாக மாறி விட்டன. இவற்றால் ஏற்படும் யுத்தத்தில் கிடைக்கப்போகும் பதில் அனைத்தும் அடங்கிய பின்னர் தமிழர்களுக்கு அந்த மீண்டும் ஆளும் வாய்ப்பு கிடைக்குமா? தீர்க்கதரிசி கூறியது தமிழர்களின் விடயத்தில் சாத்தியமாகுமா? எவ்வாறாயினும் இப்போதும், தமிழர் தலைசிறந்த இனமாகவே உலகில் இருக்கின்றனர். உலகின் இயக்கத்திற்கு தமிழர்களின் பங்களிப்பும் இருக்கத்தான் செய்கின்றது. எப்படியோ யுத்தம் ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படக் கூடாது என்பதும் மிக முக்கியம் ஆனால், இதுவரை நடந்ததையும், இனி நடக்கப்போவதையும் எவராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை. தமிழினம் என்பது ஏற்கனவே உலகை ஆண்டதற்கான ஆதாரங்கள் இக்காலகட்டத்தில் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பல நூறு ஆண்டுகளாக முடங்கி, அடங்கி போயிருந்த தமிழ் இனம் மீண்டும் உலக சக்தியாக மாறிவிடுமா? அதன் படி எதிர்காலத்தை எதிர்ப்பார்த்திருப்போம் உலகை தமிழ் இனம் மீண்டும் ஆளுமா

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news