பாரதிய ஜனதாவின் அடக்குமுறையை வருமான வரித்துறை மூலம் சந்தித்த இவர்கள் யார் ??

கர்நாடகா ரயில் நிலையத்தில் ஓட்டுநர் இல்லாமலேயே ரயில் இஞ்சின் ஒன்று 13 கிமீ வரை ஓடியது, சினிமா பாணியில் பைக்கில் துரத்திய பணியாளர், இஞ்சின் மெதுவாக ஓடும்போது அதற்குள் ஏறி அதனை நிறுத்தியுள்ளார். இந்தக் காட்சி சினிமா போல் அரங்கேறியது.

புதன்கிழமை மதியம் மும்பை செல்லும் ரயில் கர்நாடகாவின் வாடி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது. வாடி முதல் சோலாப்பூர் வரை பாதை மின்மயமாக்கப்படாததால் இங்கு மின் இஞ்சின் கழற்றப்பட்டு டீசல் இஞ்ஜின் சேர்க்கப்படுவது வழக்கம்.

டீசல் இஞ்ஜினை ஓட்டி வந்தவர் கீழே இறங்க அந்த இஞ்ஜின் மட்டும் ஓடத்தொடங்கியது. இதனையடுத்து பைக்கில் பணியாளர் இஞ்ஜினை துரத்தினர். இஞ்ஜின் மணிக்கு 30 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்தது. உடனடியாக அடுத்தடுத்த ரயில் நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அதே பாதையில் வரும் ரயில்கள் நிறுத்தப்பட்டன.

20 நிமிட பைக் விரட்டலுக்குப் பிறகு இஞ்ஜின் மெதுவாக ஓட ரயில்வே பணியாளர் இஞ்சினில் ஏறி அதனைக் கட்டுப்படுத்தினார். நல்வார் ரயில் நிலையம் அருகே இஞ்சின் ஒரு வழியாக நிறுத்தப்பட்டது.

இஞ்சின் ஏன் தானாகவே ஓடியது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news