குவைத்தில் நாம் ஓர் வணிகச் சமூகம்

குவைத்தில் நாம் ஓர் வணிகச் சமூகம்

101 102 103அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,

நன்றி, நன்றி, நன்றி

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் 23 பிப்ரவரி 2018 அன்று
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின்
அழைப்பை ஏற்று நாம் ஓர் வணிகச் சமூகம்
என்ற தலைப்பில் தமிழ் இஸ்லாமியச் சமூகத்தின்
மறக்கடிக்கப்பட்ட வணிகப் பாரம்பரியத்தை
மீட்டெடுக்கும் முன்முயற்சியாக ஏற்பாடு
செய்த மாபெரும் நிகழ்விற்காக குவைத்திற்கு வருகை
தந்த சகோ. சி.எம்.என். சலீம் அவர்களுக்கும்,

நிகழ்வை திட்டமிட்ட காலத்தில் இருந்தே எல்லா ஏற்பாடுகளிலும் உடன் இருந்து உதவிய தோழர்கள் முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் மற்றும் திருச்சி பைஜூர்ரஹ்மான் ஆகிய இருவர்களுக்கும் தோழமையோடு நன்றிகளை தெரிவித்து
கொள்கின்றோம்.

இந்நிகழ்வை அறிவிப்பு செய்த நாளில் இருந்தே தேவைப்படும் பொழுதெல்லாம் ஆலோசனைகளும், அறிவுறுத்தல்களும் வழங்கிய தோழர்களுக்கும், அரங்கத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் வழங்கிய, களைப்பை போக்க சிறப்பான தேநீர் தயாரித்து வழங்கிய தோழர்களுக்கும்

நிகழ்வை வீடியோ படமெடுத்த சகோதரருக்கும். ஆடியோ சிஸ்டம் வழங்கி உதவிய சகோதரருக்கும், புரோஜக்டர் மற்றும் ஸ்கிரீன் தந்துதவிய சகோதரர்களுக்கும்,
உணவு வழங்கிய சகோதரருக்கும், அதை எதிர்பார்க்காத நேரத்தில் தனது வாகனத்தில் எடுத்துவந்த சகோதரருக்கும், நிகழ்வு முடிந்ததும் அரங்கத்தை சுத்தம் செய்த நமது
சொந்தங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நிகழ்விற்கான அழைப்பிதழை வாட்ஸ்அப் மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் பகிர்ந்து உதவிய தோழர்களுக்கும்,

மேலும், குவைத்தில் வெகு சிறப்பாக கல்விப்பணிகளை செய்வதோடல்லாமல் மக்களுக்கு முன் எடுத்துச் சொல்வதற்கு
வாய்ப்பளித்த JMC – Alumni, NAF, KTIC, MISK & Ulama
அமைப்புகளுக்கு மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம்.

அவர்களின் சீரான கல்விப்பணிகள் மேலும் சிறக்க துஆ செய்கின்றோம்.நிகழ்வு சிறப்பாக நடைபெற வேண்டும் என துஆ செய்த எல்லோருடைய துஆக்களையும்
நிறைவேற்றித்தந்த அகிலத்தின் அதிபதி அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தாகட்டும்.

அடுத்த நிகழ்வாக 3 தினங்கள் தொடர்ந்து
நடைபெற இருக்கும் கல்விப் பயிலரங்கத்திலும்
மார்ச் 2ஆம் தேதி, ஃபாஹீல் பகுதியில் கோஹினூர் அரங்கத்தில் நடைபெற இருக்கும் நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் என்ற நிகழ்விலும் தவறாது
கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றியுடன்
பைத்துல் ஹிக்மா டிரஸ்ட்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்
குவைத்.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news