கருப்பை புற்றுநோய் தடுக்க..

கருப்பை புற்றுநோய் தடுக்க..

பெண் குழந்தைகள் சிறு வயதில் இருந்தே குறிப்பாக பூப்பெய்திய பின்னர் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதே போல் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் மாதவிலக்கு கோளாறுகளை மருத்துவரிடம் காண்பித்து உடனே சரி செய்து கொள்ள வேண்டும். திருமணத்துக்கு பின்னர் சுகாதாரத்தை கடை பிடிக்க வேண்டும்.
பால்வினை நோய்கள் தாக்காமல் காத்துக் கொள்ள வேண்டும். புற்றுநோய் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். சத்தான உணவு மற்றும் டென்ஷன் இல்லாத வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை தவிர்த்து, உடற்பயிற்சி மூலம் எடையை பேண வேண்டும். 30 வயதுக்கு பின்னர் கண்டிப்பாக ஆண்டுக்கு ஒரு முறை பெண்கள் தங்களது உடல் நலம் சார்ந்த பரிசோதனை செய்வதை நடை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதே போல் கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறி தென்பட்டால் உடனடியாக அது சார்ந்த மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம்.

அசோகமரப்பட்டை, மாதுளம் பழத்தை காய வைத்து பொடி செய்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும், மூன்று சிட்டிகை அளவுக்கு தண்ணீரில் கலந்து குடித்தால் கருப்பை கோளாறுகள் குணமாகும்.

கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்க அசோகமரப் பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம்.அருகம்புல் வேருடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.ஆலமரப் பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும்.

ஆற்றுத் தும்பட்டியை மூலப்பொருளாக கொண்டு செய்யப்படும் குன்மகுடோரி மெழுகை கடைகளில் வாங்கி பட்டாணி அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் கருப்பை சார்ந்த அத்தனை கோளாறுகளும் தீரும்.பத்து கிராம் இம்பூறல் வேர்ப்பட்டையுடன் ஒரு கிராம் பெருங்காயம் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

கரிசலாங்கண்ணி கீரைச்சாறு 30 மில்லியுடன் பருப்பு கீரை சாறு 30 மில்லி எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்ப நிலைப் புற்றுநோய் குணமாகும்.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news