பேருந்தில் ஒரு உரையாடல்

பேருந்தில் ஒரு உரையாடல்

சார் கொடுமைய பாருங்க சார்
என்ன சார் விளக்கமா , சொல்லுங்க சார்…

ஒரு பையன் அவங்க அப்பா குடிக்கிறார் சொல்லி தூக்குல தொங்குனானே

ஆமா அதை எதுக்கு இப்போ சொல்றீங்க

அவன் பிளஸ் டூ ல 1024 மார்க் எடுத்திருக்கான்

என்ன கொடுமை சார் இது. இவ்வளோ நல்ல மார்க் எடுத்தவன் கொஞ்சம் முடிவை தள்ளிப் போட்டிருக்கலாம் …

அப்படி இல்லை, க்ரானிக் டிசீஸ் மாதிரி தொடர்ந்து அப்பாவினால் தொல்லை படுத்தப்பட்டு மன அழுத்தத் திற்கு ஆளாகும் பொழுது மூளையின் வேதி சுரப்புகள் மாறிவிடும், வேதியல் செய்யும் வேலைப்பா …

மனசு ஆரலப்பா …

அந்த கட்சீல நாலுபேரு இந்த கட்சீல நாலு பேருன்னு எட்டு சாராய ஆலைகளை வச்சுருக்கானுக , தாலியருக்கிறனவுக…

பெரியார் தன் வீட்டு பண்ணை மரங்களை வெட்டிவிட்டுத்தான் மதுவிலக்கு பற்றி பேசினார்

இந்த நாய்கள் அவர் போட்டுகொடுத்த பாதையில் வந்து சாராயம் விக்குதுக … டி.வி.நடத்தி விநாயகர் புராணம் பாடுதுக …

மொள்ளமாரி பசங்க

அவனுக மட்டுமா மொள்ளமாரிங்க
இரண்டாயிர ஓவாய்க்கு ஒட்டு போட்ட சனங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்

சார் தெரியாம சொல்லீட்டேன், போன இலக்கசனுக்கு வீட்டுக்குள்ள வேட்டி சட்டைய போட்டானுக, நான் எடுத்து அதை குப்பை வாங்குற மேஸ்திரிக்கு கொடுத்துட்டேன், ஒரு வேட்டி, அதுவும் அவனுகளா போட்டதுக்கு என்னைய மொள்ளமாறின்னா என்ன அர்த்தம் …

சீரியசா எடுத்துகாதீங்க …

பஸ் நிறுத்தத்திற்கு வருகிறது

1 Comment to “பேருந்தில் ஒரு உரையாடல்”

  1. Thank you for the chapters 🙂quake on the lake

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news