கோப்ரா போஸ்ட்டின் – புதிய “ஸ்டிங் ஆபரேஷன்” – விலைபோகத் தயாராக இருக்கும் ஊடகங்களின் பட்டியல்…!!!

கோப்ரா போஸ்ட்டின் – புதிய “ஸ்டிங் ஆபரேஷன்” – விலைபோகத் தயாராக இருக்கும் ஊடகங்களின் பட்டியல்…!!!

123பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, கட்சி ரீதியாக செய்யும் பிரச்சாரங்களுக்கு மக்களிடம் மதிப்போ, நம்பிக்கையோ ஏற்படுவதில்லை என்பதால் –

அன்றாடம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ஊடகங்களில் ஊடுருவி, அதன் மூலம் அவர்கள் எண்ணங்களை தங்களுக்கு சாதகாகத் திருப்பும் வழியில் – மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலமாக இருக்கும் ஊடகங்களை ரகசியமாக விலைபேசி
தங்களுக்கு சாதகமாக செயல்படுத்தும் முயற்சியில் மத்தியில் ஆளும் கட்சி ஈடுபட்டிருக்கிறது….. நடுநிலையோடு இவற்றை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் ஏற்கெனவே இதனை உணர்கின்றனர்.

இப்போது, மற்ற சாதாரண பொதுமக்களும் நம்பும் வகையில், உரிய ஆதாரங்களுடன் – கோப்ராபோஸ்ட் தளம் தனது ஸ்டிங் ஆபரேஷன்களின் மூலம் பல அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது..

நம்புவதற்கே கடினமாக இருக்கும்….

பெரிய பெரிய ஊடகங்கள் கூட, கோடிகளில் பணம் பெற்றுக்கொண்டு, மத உணர்வுகளை ஊக்குவிக்கும் வகையிலும், இந்துத்வா சக்திகளுக்கு விளம்பரம் கொடுக்கும் வகையிலும் paid news வெளியிட தயாராக இருப்பது தெரிய
வருகிறது….

cp_logoஇந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவான செய்திகள் மட்டுமல்ல, சமுதாய நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலும் அதன் மூலம் குறிப்பிட்ட கட்சிக்கு செல்வாக்கு அதிகரிக்கும் விதமாகவும் செயல்படத் தயார் என்று சொல்லி விலைபோயிருக்கிறார்கள் பிரபல ஊடகத்தினர்.

இந்துத்துவ சக்திகள் போல தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு இந்தியா முழுதும் சுமார் 24 ஊடக நிறுவனங்களை கோப்ரா போஸ்ட் செய்தியாளர்கள் அணுகியிருக்கிறார்கள்…

அவர்கள் அணுகிய ஊடகங்களில், வர்த்தமான், டெய்னிக் சம்பத் ஆகிய இரண்டே இரண்டு வங்காள மொழி ஊடகங்களை தவிர அநேக புகழ்பெற்ற ஊடகங்கள் இதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றன.

கோப்ரா போஸ்ட் அணுகிய ஊடகங்களில் – அவர்களுக்கு இணக்கம் தெரிவித்தவற்றில் ஹிந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஏபிபி, பிக் எஃப் எம் (ரேடியோ), தைனிக் ஜாக்ரன், தினமலர், சன் குழு, புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஆகியவையும் உள்ளன….என்று சொல்கிறது கோப்ரா….!!!

இது குறித்த விவரங்களை இன்னும் முழுவதுமாக படிக்க முடியவில்லை. மேலும் செய்திகளை ஆராய்ந்த பின்னர் கிடைக்கும் தகவல்களை பின்னர் தனியே பதிவிடுகிறேன்….

இதிலிருந்து இப்போதைக்கு கிடைக்கும் உறுதியான ஒரு ஆலோசனை –

“எந்த மீடியாவையும் (ஊடகத்தை), அது எவ்வளவு பெரிதாகவும்,
புகழ்பெற்றதாகவும் இருந்தாலும் – முழுவதுமாக நம்பி விடக்கூடாது…” என்பதே…

 

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news