சமூக விரோதிகளா, போராட்டக்காரர்களா

சமூக விரோதிகளா, போராட்டக்காரர்களா

dinakaranஜனநாயக நாட்டில் போராட்டம் என்பது அறவழியில் நடத்தப்படுவதாகும். மகாத்மா காந்திகூட அறவழியில் போராட்டம் நடத்தியவர்தான்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுகாதாரகேடு காரணமாக போராட்டம் ஏற்பட்டது. சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். இவர்கள் என்ன சமூக விரோதிகளா?தமிழக அரசு காவல் துறை மூலமாக மாநிலம் முழுவதும் அராஜகத்தை கட்டவிழ்த்துள்ளது. மத்திய அரசுஇ தாய் கோழிக்குஞ்சை பாதுகாப்பது போல தமிழக அரசை காப்பாற்றி வருகிறது.எங்கள் கட்சிக்காரர்களை தீவிரவாதி போல கைது செய்யும் தமிழக காவல் துறைஇ எஸ்.வி.சேகரை கைது செய்ய பயப்படுகிறது.சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை பொறுத்தவரை தமிழக அரசு முதலில் நில உரிமையாளர்களிடம் பேசவேண்டும். இந்த திட்டத்தால் அவர்களுக்கு பாதிப்பு இல்லையென்றால் தாராளமாக திட்டத்தை செயல்படுத்தலாம்.
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக அறவழியில் போராடிய நடிகர் மன்சூர்அலிகான்இ சமூக ஆர்வலர்கள் வளர்மதிஇ பியூஸ்மானுஷ் ஆகியோரை கைது செய்ததில் என்ன நியாயம் இருக்கிறது?
குட்கா வி‌ஷயத்தில் விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும். இதற்காக அந்த வழக்கை துரிதப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.விவசாயி மகன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிஇ துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.மகாத்மா காந்தி உயிரோடு இருந்திருந்து அறவழியில் போராட்டம் நடத்தியிருந்தால் தமிழக அரசு அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்திருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news