முடிவுரைக்குப்பின் கதை எழுதுவதா..?

முடிவுரைக்குப்பின் கதை எழுதுவதா..?

67007f7bf5e42af9bf9c785617c301dfஒருநாள்  முல்லா  தெரு  விளக்கு  வெளிச்சத்தில்  எதையோ  தேடி  கொண்டு  இருந்தார் . அப்போது  வந்த முல்லாவின்  நண்பர்  “என்ன  தேடுகிறீர்கள்  முல்லா  என்று   கேட்டார். எனது  மோதிரம்  தொலைந்து  விட்டது , அதை  தான்  தேடுகிறேன்  என்றார் . மோதிரம்  இங்குதான்  தொலைந்ததா  என்று   நண்பர் கேட்டதற்கு முல்லா  பக்கத்தில்  உள்ள  இருளில்  தொலைந்தது  ஆனால்  இருளில்  தேட  முடியாது  என்பதால்  பக்கத்தில்  உள்ள  வெளிச்சத்தில்  தேடுகிறேன்  என்றார்.

அதுபோல்  ஜெயலலிதா  மறைவிற்கு  அமைக்கப்பட்ட  விசாரணை  ஆணையம் , போயஸ்  தோட்ட  வேலையாள் , அப்போலோ  ஹாஸ்பிடல் செக்யூரிட்டி என்று  பலரையும் கூப்பிட்டு சசிகலாவிற்கு  எதிராக  வாக்குமூலம்  கிடைக்குமா  என்று முயற்சிக்கிறது.
ஆனால்  அதிகாரங்களை வைத்திருந்த   அப்போதைய  பொறுப்பு  முதல்வர் , மாநில  சுகாதார   துறை  அமைச்சர், AIIMS டாக்டர்கள் , அவர்களை  அனுப்பிய மத்திய  சுகாதார துறை அமைச்சர் , மருத்துவமனையில் வந்து சந்தித்த  அப்போதைய  கவர்னர் , அப்போதைய மத்திய அமைச்சர் தற்போதைய  துணை  குடியரசு  தலைவர்  இவர்களை  விசாரிக்க  வேண்டியதுதானே ?
அதை  விட்டு  வாட்ச்மன்  வேலையாள்  விசாரிப்பது , வெளிச்சத்தில்  தேடிய  முல்லாவின்  கதை போல்  அல்லவா  இருக்கிறது.
அது  என்ன ஜெயலலிதாவிற்கு  ஸ்வீட்  கொடுக்கப்பட்டதா ? என்று ஒரு  கேள்வி.அவர் என்ன  கை  குழந்தையா ? ஜெயலலிதா  ஸ்வீட்  சாப்பிட்டாரா ? என்பது தானே  சரியான   கேள்வியாக இருக்க முடியும்.
ஒவ்வரு  முறையும் ஆணையத்தில்  இருந்து ஊடகத்துக்கு  கசிய  விடப்படும் தகவல் சசிகலா விற்கு  எதிராக  இருக்கிறது ?
முடிவுரை  எழுதி விட்டு, கதையை  எழுதுகிறதா  ஆணையம் 

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news