கலைஞர் மறைவு 

கலைஞர் மறைவு 

DMK_KTNசாதிய கொடுமைகள் சமூக புறக்கணிப்புகள் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உழைப்புச் சுரண்டல் போன்ற மானுடத்திற்கு எதிரான அட்டூழியங்களை எதிர்த்து உழைக்கும் மக்களின் சமூக விடுதலைக்காக பேசிய எழுதிய போராடிய தலைவர்களின் பிறப்பிடமாக தமிழகம் திகழுகிறது.

அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன், தந்தை பெரியார், பேரறிஞர்அண்ணா, காமராஜர் வரிசையில் குடியரசு இந்தியாவின் மூத்த முதுபெரும் தலைவர் கலைஞர் கருணாநிதி மறைந்தார்.

வாழ்க்கையில் கிடைக்கப்பெற்ற காலத்தை பயனுள்ள வகையில் வாழ்பவர்களுக்கே 
மனஅமைதி கிடைக்கிறது.

20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிறந்த சில தலைவர்களின் அறிவையும் ஆளுமையையும் போர்க் குணத்தையும் மானுட வரலாறு மெச்சி உச்சி முகர்ந்து தனது வைர எழுத்துக்களால் பதிவு செய்துள்ளது.

அரசியல் ஓட்டத்தில் சில பல ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் சமூகநீதி சித்தாந்தத்தை உயிர் மூச்சாக கொண்ட திராவிட இயக்கத்தின் தனிபெரும் தலைவர் கலைஞர் அவர்களின் மறைவு….

சித்தாந்த பின்புலம் கொண்ட அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் குறைந்து வரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சிலரைக்கொண்டு சிலரை தடுக்கவில்லை யென்றால் இந்த பூமி இரத்தக் காடாக மாறிவிடும் என்ற அல்லாஹ்வின் வார்த்தையில் நம்பிக்கை கொண்ட நாம் சமூகநீதியை உயர்த்திப் பிடித்து மதவெறியை மாய்க்கும் சிந்தனையாளர்களை தலைவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் போராட்ட பயணத்தை தொடருவோம்.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news