K-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…

K-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…

K-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…….

*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர்* சென்னை அல்ஹாஜ் *ஏ.கே.எஸ். அப்துன் நாசர்* அவர்களின் தாயாரும், சொல்லின் செல்வர் மவ்லானா *ஏ.கே. அப்துல் காதர் மிஸ்பாஹி* ஹஜ்ரத் அவர்களின் மனைவியுமான ஜனாபா *ஹவ்லா பீவி* அவர்கள் *இன்று (20.11.2018 செவ்வாய்க்கிழமை) காலை* சென்னையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

*இன்ஷா அல்லாஹ் நாளை (21.11.2018 புதன் கிழமை) காலை 8:00 மணிக்கு மதுரை மாவட்டம், கரிசல் பட்டியில் நல்லடக்கம் செய்யப்படும்.*

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய *ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்* எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் *ஸப்ரன் ஜமீலா* எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* பிரார்த்தனை செய்கிறது.

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படியும், ஜனாஸா தொழுகையில் பங்கேற்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

ஆறுதல் சொல்வதற்கு…
அல்ஹாஜ் *அப்துல் நாசர்* – +965 *9943 0786*
மவ்லானா *அப்துல் காதர் ஹஜ்ரத்* – +91 *97907 12394*

நன்றி! வஸ்ஸலாம்!!

*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
+965 *9787 2482*
*www.k-tic.com*

Leave a comment

Your email address will not be published.

*




Hit Counter provided by technology news