29 – 11 – 2019 அன்று குவைத்தில் திருக்குறள் மாநாடு

29 – 11 – 2019 அன்று குவைத்தில் திருக்குறள் மாநாடு

தமிழ் நாட்டியம்,கரகாட்டம், சிந்தனைக்கு விருது கொடுக்கும் எம். ஆர். ராதா அவர்களின் மூடநம்பிக்கை ஒழிப்பு வசனங்கள் அடங்கிய நடிப்புடன் கூடிய திராவிட டிக்டாக் நிகழ்ச்சிகள் மூலம் காவியின் முகத்திரையை கிழிக்கும் நிகழ்ச்சி.தமிழ் அறிஞர்கள்,ஒன்று கூடி நடத்தும் மாபெரும் திராவிடப் பாரம்பரிய திருக்குறள் மாநாட்டுப் பணிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றது.
தாய்மொழியாம் தமிழில் வள்ளுவன் உருவாக்கிய திருக்குறளை உலகிலுள்ள பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கொண்டிருக்கையில், திருக்குறளை அரபு மொழியில் மொழிமாற்றம் செய்த மதிப்பிற்குரிய பேராசிரியர் ஐயா டாக்டர் ஜாகிர் உசேன் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார், அடக்குமுறைச் சட்டம் மிசா காலத்தில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்ட பொழுது துணி உடனே மின்சாரம் என்ற பெயரில் தனது கருத்துக்களை மக்களுக்கு பத்திரிக்கையின் வாயிலாக வெளியிட்டுக் கொண்டிருந்த ஐயா பெருமைக்குரிய அய்யா மானமிகு கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த மதுரை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பாசத்திற்குரிய பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஐயா அவர்களும் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்க இருக்கின்றனர்.
தமிழ் உறவுகளே தமிழர்களுடைய அடையாளத்தை மறைக்க முயலும் காவி கூடாரத்தை காலி செய்ய ஒன்றாக கூடுங்கள் குவைத் மாநகரிலே நடக்கும் திருக்குறள் மாநாட்டிற்கு குடும்பத்துடன் வந்து மாநாட்டில் கலந்து கொள்ளுங்கள்.
குவைத் திருக்குறள் மாநாட்டின் உடைய வெற்றி உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் உள்ள தமிழர்கள் திருக்குறள் மாநாட்டை நடத்தத் தான் போகிறார்கள் உலகம் முழுவதும் காவியின் உடைய முகத்திரையை கிழிக்க தான் போகிறார்கள் நம் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்பதுதான் உண்மை.
Periyar Library 04

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news