திருமறையின் அற்புதம் நிறைந்த அல் இக்லாஸ் அத்தியாயம் பாதிரியார் ஜோசப்பை மவ்லவி யுசுபாக மாற்றியது

திருமறையின் அற்புதம் நிறைந்த அல் இக்லாஸ் அத்தியாயம் பாதிரியார் ஜோசப்பை மவ்லவி யுசுபாக மாற்றியது

திருமறையின் அற்புதம் நிறைந்த அல் இக்லாஸ் அத்தியாயம்
பாதிரியார் ஜோசப்பை மவ்லவி யுசுபாக மாற்றியது
*******************************************
قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

அல்லாஹ் ஒருவன் என கூறுவீராக அல்லாஹ் தேவைகள் அற்றவன் (யாரையும்) அவன் பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவும் இல்லை அவனுக்கு நிகராக யாரும் இல்லை

அமெரிக்காவை சார்ந்தவர் பாதிரியார் ஜோசப். இவர் தீவிர கிருத்துவ பற்று நிறைந்த குடம்பத்தில் பிறந்தவர் இவர் மட்டுமல்ல இவரின் தந்தையும் கிருத்துவ மதகுருவாகவே இருந்தார்

தனது வாலிப பருவத்தில் இஸ்லாத்தின் மீது வெறுப்பையும் கிருத்துவத்தின் மீது வெறியையும் கொண்டு வளர்ந்தவர் இவர்

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும் தவறான கொள்கையை போதிப்பவர்களாகவும் கருதி வந்தவர் பாதிரியார் ஜோசப்

இதனால் முஸ்லிம்களிடம் பழகுவதையும் பேசுவதையும் கூட அவர் தவிர்த்து வந்தார் முஸ்லிம்களை கண்டால் விலகி செல்லும் பண்புடையவராக இருந்தார்

இப்படி இருந்த இவரின் வாழ்வில் எப்படி இஸ்லாம்நுழைந்தது
அது ஒரு சுவையான நிகழ்வு

மதகுருவாகவும் வணிகராகவும் இருந்த இவரின் தந்தையுடன் எகிப்தை சார்ந்த ஒரு முஸ்லிம் வணிகர் தொடர்பில் இருந்தார்

அந்த முஸ்லிம் வணிகர் வணிகம் தொடர்ப்பாக இவரின் தந்தையை சந்திப்பதர்காக அமெரிக்கா வந்தார் அவரை விமான நிலையம் சென்று வரவேற்று அழைத்து வரும் பொறுப்பை ஜோசபிடம் ஒப்படைத்தார் அவரின் தந்தை

ஒரு முஸ்லிமை நான் சென்று வரவேர்க்க மாட்டேன் என்று முதலில் மறுத்த ஜோசப் தந்தையின் நிர்பந்தத்தினால் ஒப்பு கொண்டு விமான நிலையம் சென்று அந்த எகிப்த் முஸ்லிமை வரவேற்று தனது இல்லத்திர்கு அழைத்து வந்தார்

இப்போது அந்த வீட்டில் பாதிரியார் ஜோசப் பாதிரியாராக இருக்கும் அவரின் தந்தை மேலும் இரண்டு கிருத்துவ பாதிரிகள் இவர்களிடையே ஒரு முஸ்லிம் வணிகர்

ஒரு முஸ்லிமுடன் தங்குவதை மனதளவில் வெறுத்து வந்த பாதிரியார் ஜோசப் ஒரு முடிவுக்கு வந்தார்

நாம் நான்கு கிருத்துவ போதகர்கள் அவரு ஒரு சாதாரண முஸ்லிம் வணிகர் இந்த சந்தர்பத்தை பயன படுத்தி அவரை கிருத்துவராக மாற்றி விடவேண்டும் என்ற முடிவோடு அந்த முஸ்லிமிடம் கிருத்துவத்தை பற்றி கூறி அவரை கிருத்துவ மத்த்தில் இணைந்து விடுமாறு அழைப்பு விடுத்தார்

அந்த முஸ்லிமின் பதில் தெழிவாக இருந்த்து

எனது மார்க்கத்தில் இருப்பதை விட ஒரு சிறந்த விசயம் உங்கள் மதத்தில் இருந்தால் சொல்லுங்கள் உங்கள் மத்த்தை ஏற்று கொள்கிறேன் இது முஸ்லிமின் பதில்

கடவுள் கொள்கையின் பக்கம் விவாதம் திரும்பியது கிருத்துவர்களின் கடவுள் கொள்கை பற்றி எகிப்து முஸ்லிம் எழுப்பிய ஐயங்களுக்கு குழப்பமான பதில்களையே அந்த பாதிரிகளால் தரமுடிந்தது

அவர்கள் கூறும் பதிலில் தெழிவு இல்லைகுழப்பம் நிறைந்துள்ளதுதைஅவர்களாலேயே உணரமுடிந்தது

தங்கள் பலகீனத்தை மறைப்பதர்காக அந்த எகிப்த் முஸ்லிம் வணிகரிடம் இஸ்லாமிய கடவுள் கொள்கை பற்றி வினா தொடுத்தனர்

அந்த வணிகர் குழப்பமே இல்லாமல் எங்கள் பதில் தெழிவானது நிறைவானது எனகூறிவிட்டு இஸ்லாத்தின் கடவுள் கொள்கை பிரகடனமாக அமையும் அல் இக்லாஸ் அத்தியாயத்தை ஓதி காட்டினார்

பாதிரியார் ஜோசப் வாயடைத்து போனார் அமைதியானார் அவரால் பதில் சொல்ல முடியவில்லை மீண்டும் மீண்டும் சிந்தித்தார்

இஸ்லாம் பற்றி பல விதங்களிலும் ஆய்வு செய்தார் இறுதியில் அவர் கிருத்துவத்திர்கு விடை கொடுத்து இஸ்லாத்தில் இணைந்தார்

அவர் மட்டுமின்றி அவரது தந்தை உட்பட ஒட்டு மொத்த குடும்பமும் இஸ்லாத்தில் இணைந்தது

தனது இருப்பிடத்தையும் எகிப்துக்கு மாற்றி கொண்டார்

இன்றும் அவர் எகிப்தின் அலக்ஸாணடரியாவில்மிக பெரிய முஸ்லிம் மார்க்க அறிஞராக வாழ்ந்து வருகிறார்
அல்ஹம்துலில்லாஹ்

2 Comments to “திருமறையின் அற்புதம் நிறைந்த அல் இக்லாஸ் அத்தியாயம் பாதிரியார் ஜோசப்பை மவ்லவி யுசுபாக மாற்றியது”

  1. gJoWHY ibtnwwllapkm, [url=http://hyvpvzmhsapj.com/]hyvpvzmhsapj[/url], [link=http://lxederyujnwq.com/]lxederyujnwq[/link], http://yfeuuielzbck.com/

  2. alhamdulillah. i’m also an ex-christian

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news